ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் அவர்களை ஆதரித்து மாண்புமிகு அமைச்சர் சு முத்துசாமி அவர்கள் 17.01.2025 இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதில், இந்தியா கூட்டணி கட்சியின் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆகியோர் கலந்துகொண்டு, ஈரோடு வீரப்பன்சத்திரம் 26 வது வார்டில் உள்ள கிருஷ்ணம்பாளையம் ரோடு, கணபதிபுரம், விநாயகர் கோவில் வீதி, பச்சையம்மன் கோவில் வீதி, கிருஷ்ணன் வீதி, சொக்காய் தோட்டம், கலைஞர் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களை சந்தித்து திமுக -விற்கு வாக்களிக்ககோரி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.