ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி 2025 இடைத்தேர்தலில் இதுவரை, 10.01.2025 அன்று 3 மனுக்கள் பெறப்பட்டு, 13.01.2025 அன்று 7 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
அதன் பின்னர் 17.1.2025 இன்று 55 மனுக்கள் என மொத்தம் 65 வேட்புமனுக்கள் (58 வேட்பாளர்கள்) பெறப்பட்டுள்ளது.
இதில், வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாளான 17.01.2025 இன்று மாநகராட்சி ஆணையாளரிடம் 36 மனுக்களும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் 19 மனுக்களும் என 55 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 58 வேட்பாளர்கள் 65 மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.