ஈரோடு நந்தா கல்வி நிறுவனங்களின் சார்பில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களின் சிறந்த படைப்பாற்றல்களை வெளிக்கொணரும் வகையிலும், ஊக்குவிக்கும் வகையிலும் (06, 07 பிப்ரவரி 2025) இரண்டு நாட்கள் கொண்ட 14வது மாணவர்களின் படைப்பாற்றல் "விஞ்ஞானி 25" கண்காட்சியின் துவக்க விழா நந்தா தொழில்நுட்ப வளாகத்தில் நடைபெற்றது.
வி.சண்முகன் தலைமை தாங்கினார். இக்கண்காட்சியை ஈரோடு மாவட்ட கல்வி அதிகாரி ஜி. சுப்பா ராவ் மற்றும் தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அதிகாரி ஆர். கேசவகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு துவக்கி வைத்தார்கள்.
இவர்களோடு ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையத்தின் தாளாளர் கே.செல்வராஜ், பெருந்துறை சாகர் பன்னாட்டு பள்ளியின் தாளாளர் சி.சௌந்திராஜன், இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவரும் "நெக் கேர்" மருத்துவமனையின் தலைவருமான மருத்துவர் சி.என். ராஜா, அந்தியூர் விஸ்வேஷ்ரய்யா மெட்ரிக் பள்ளியின் தாளாளர் வி.ஏ.சுப்பிரமணியன், சீனாபுரம் கொங்கு வெள்ளாளர் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் என். விஸ்வநாதன் மற்றும் ஜேசீஸ் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் முனைவர் கே.நாகராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் படைபாற்றல் அடங்கிய ஏனைய கண்காட்சி பகுதிகளை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்கள்.
இக்கண்காட்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் மருத்துவம், அறிவியல், பொறியியல் சார்ந்த 1412-க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகள் இடம்பெற்றன.
மேலும், இக்கண்காட்சியில் நந்தா கல்வி சார்பு நிறுவனங்களைச் சார்ந்த பொறியியல், சித்தா, இயற்கை மற்றும் யோகா, மருந்தியல், செவிலியர், இயன்முறை மருத்துவம், கலை அறிவியல் மற்றும் பள்ளி மாணவர்களின் கண்டுபிடிப்புகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இத்தகைய கண்டுபிடிப்புகளில்
ஸ்மார்ட் சக்கர நாற்காலி, ஸ்மார்ட் இரும்பு பெட்டி, ஹைப்ரிட் கார், தானியங்கி வாகனம், முதலுதவி விற்பனை இயந்திரம், எடை குறைவான மின் வாகனம், சேவை செய்யும் இயந்திரன், டை எட்ஜ் போட்டோவோல்டிக் செல், ரோர் ஈ.ஏ. ஸ்மார்ட் பிக் அண்ட் ஐடென்டிபை போட், நாப்கின் டிஸ்பென்ஷரி
போன்ற 173 க்கும் மேற்பட்ட மாணவர்களின் தனித்துவம் வாய்ந்த படைப்புகளும் அடங்கும்.
ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலர் எஸ்.நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ்.திருமூர்த்தி, மற்றும் முதன்மை நிர்வாக அலுவலர் முனைவர் எஸ்.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
முதல் நாளான (06.02.2025) இன்று , ஈரோடு மாவட்ட பள்ளிகளிலிருந்து சுமார் 520 க்கும் மேற்பட்ட மாணவர்களும், நந்தா கல்வி நிறுவனங்களில் பயின்று வரும் மாணவர்கள் மற்றும் பொது மக்கள், மாணவர்கள் உட்பட சுமார் 9000 க்கும் மேற்பட்டோரும் இக்கண்காட்சியை பார்வையிட்டு சென்றார்கள் என்கிற செய்தினை நந்தா பொறியியல் கல்லூரியின் புதிய படைப்புகள் முன்னேற்ற மையத்தின் தலைவர் புலமுதல்வர் எம்.ஈஸ்வரமூர்த்தி தெரிவித்தார்.
இரண்டாம் நாளன்று (07.02.2025) மதியம், டெக்னாலஜி தியேட்டர், ஐடியா ப்ரஸன்டேஷன் மற்றும் ப்ராஜக்ட் ப்ரஸன்டேஷன் ஆகிய வகைகளில் சிறந்த படைப்புகளை தேர்ந்தேடுத்து அதனை உருவாக்கிய இளம் விஞ்ஞானிகளுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். இவ்விருதுகள் மற்றும் சான்றிதழ்களை நியூடெல்லி தேசிய இயற்பியல் ஆய்வகத்தின் மூத்த விஞ்ஞானி பேராசிரியர் முனைவர் என்.விஜயன் மற்றும் ஈரோடு மக்கள் சிந்தனை பேரவையின் தலைவர் டி. ஸ்டாலின் குணசேகரன் ஆகியோர் இளம் விஞ்ஞானிகளுக்கு வழங்கி கௌரவிக்கப்பட இருப்பதாக ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் வி.சண்முகன் தனது தலைமை உரையில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் இக்கண்காட்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக ஒருங்கிணைந்து செயல்புரிந்த நந்தா தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் எஸ். நந்தகோபால் மற்றும் நந்தா கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் எஸ். மனோகரன் உட்பட ஏனைய நந்தா கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்தார்.