பன்னாட்டு அரிமா சங்கங்கள் சார்பில் ஈரோடு ஸ்டார் அரிமா சங்கம் ஏற்று நடத்திய மூன்றாவது வட்டார ஆலோசனைக் கூட்டம் மற்றும் வட்டாரம் சார்ந்த சங்கங்களின் கூட்டு கூட்டம் (17.02.2025) திங்கட்கிழமையன்று ஈரோட்டிலுள்ள கடோத்கஜா ஹோட்டலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக, பன்னாட்டு அரிமா முன்னாள் இயக்குனர் அரிமா. K. தனபால், முதலாம் துணை மாவட்ட ஆளுநர் அரிமா. E. விஸ்வநாதன், இரண்டாம் துணை மாவட்ட ஆளுநர் அரிமா. R. பொன்னுசாமி, முன்னாள் மாவட்ட ஆளுநர் அரிமா. பூர்ணிமா டன்னா, முன்னாள் மாவட்ட ஆளுநர் அரிமா. D. ரவீந்திரன், மண்டல தலைவி அரிமா. சந்திரா ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், ஈரோடு ஸ்டார் அரிமா சங்கத்தின் தலைவர் அரிமா. L. மாணிக்க சுந்தரம், செயலாளர் அரிமா. C. துரைசாமி, செயலர் அரிமா. D. மனோஜ், பொருளர் அரிமா. C. யுவராஜ், முதல் உதவி தலைவர் அரிமா. A.C. மைக்கேல் ஆகியோர் மற்றும் ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம், ஈரோடு காவேரி அரிமா சங்கம், ஈரோடு எக்ஸெலண்ட் அரிமா சங்கம், ஈரோடு கோல்டன் சிட்டி அரிமா சங்கம், ஈரோடு ஸ்டார் அரிமா சங்கம், ஈரோடு எல்லோ சன் சிட்டி அரிமா சங்கம் ஆகிய சங்கங்களின் தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.