ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம், ஈரோடு சுப்ரீம் சேவை அறக்கட்டளை, சிக்கய்ய நாயக்கர் கல்லூரி, RAINABLE FILTERS அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி 07.03.2025 நேற்று நடைபெற்றது.
பேரணியை, ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் V.C.சந்திரகுமார் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக, மாநில நெசவாளர் அணி செயலாளர் அரிமா SLT.சச்சிதானந்தம், ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) - முனைவர் சு.மனோகரன், Rainable Filters Chairman J. ரமேஷ்பாபு, மண்டல தலைவி அரிமா. சந்திரா ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஈரோடு சுப்ரீம் அரிமா சங்க தலைவர் அரிமா S.அசோக்குமார் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி ஈரோடு வ.உ.சி பார்க்கிலிருந்து ஈரோடு சி.நா.கல்லூரி வரை நடைபெற்றது.
இந்நிகழ்வில், ஈரோடு சுப்ரீம் அரிமா சங்க செயலர் (நிர்வாகம்) அரிமா K.குமார், செயலர் (சேவை) அரிமா S.P. இராஜமாணிக்கம், பொருளர் அரிமா P.கதிர்வேல் ஆகியோர் மற்றும் அரிமா சங்கத்தினர், கல்லூரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.