ஈரோடு மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராக தோப்பு வெங்கடாசலம் நியமிக்கப்பட்டதையடுத்து பெருந்துறையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவுக்கு மாநில துணைச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ் தலைமை வகித்தார். தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரும் ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான சு.முத்துசாமி, ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், ஈரோடு எம்.பி. கே.இ.பிரகாஷ், எம் எல் ஏ -க்கள்
அந்தியூர் வெங்கடாசலம், வி.சி.சந்திரகுமார் ஆகியோருக்கு தி.மு.க.வைச் சேர்ந்த பெண்கள் பூரண கும்ப மரியாதையுடன் தோப்பு வெங்கடாசலம் வரவேற்றார்.
பின்னர், தாரை தப்பட்டையுடன் அதிர்வேட்டுகள் முழங்க ஊர்வலமாக வந்து அண்ணா சிலைக்கு அமைச்சர் சு.முத்துசாமி, தோப்பு வெங்கடாசலம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில், ஈரோடு மாநகர மாவட்ட தி.மு.க. செயலாளர் சுப்பிரமணியம், தி.மு.க. சட்டத்துறை மாநில இணை செயலாளர் ராதாகிருஷ்ணன், தி.மு.க. மாநில விவசாய அணி இணைச் செயலாளர் குறிஞ்சி என்.சிவகுமார், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் வே.செல்வராஜ், ஈரோடு மாநகராட்சி கவுன்சிலர் செல்ல பொன்னி, பெருந்துறை தெற்கு ஒன்றிய செயலாளர் கே.பி.சாமி, வடக்கு ஒன்றிய செயலாளர் பால் சின்னசாமி, கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியசாமி, ஒன்றிய செயலாளர் செங்கோட்டையன், பவானி நகர செயலாளர் ப.சீ.நாகராஜன், பெருந்துறை நகராட்சி தலைவர் ஓ.சி.வி.ராஜேந்திரன், பேரூராட்சி தலைவர்கள் ஓ.சி.வி., செல்வன், பாக்கியலட்சுமி, தலைமை நிலைய பேச்சாளர் இளையகோபால், மருத்துவர் அணி இணைச் செயலாளர் எஸ்.பாலாஜி, சென்னிமலை ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் காயத்ரி இளங்கோ, குமாரவலசு ஊராட்சி தலைவர் இளங்கோ, உட்பட பலர் கலந்து கொண்டனர்.