இன்ட்ராக்ட் கிளப் ஆப் ஈரோடு பப்ளிக் பள்ளி, ஈரோடு பப்ளிக் பள்ளி மற்றும் ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கம் ஆகியோர் இணைந்து பொதுமக்களுக்கு போதையற்ற சமூகத்தை உருவாக்குவோம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபேரணி நடத்தினர். இதில் ஈரோடு பப்ளிக் பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள், ரோட்டரி கிளப்பின் உறுப்பினர்கள், இதர பள்ளி - கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஈரோடு பப்ளிக் பள்ளியின் தலைவர் V.R. சிவசுப்பிரமணியன், தாளாளர் S.மைதலட்சுமி, செயலாளர் V.S. அருண் கணேஷ் மற்றும் துணைச்செயலாளர் அனித்தா, ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி கிளப் தலைவர் P. சுரேஷ், செயலாளர் K. செந்தில்குமார், பொருளாளர் D. நவீன் குமார், முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் திட்டத் தலைவர் Ar. N. நந்தினி ஆகியோரின் தலைமையில், ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் பட்டய தலைவர் சகாதேவன் (Lotus hospital) டாக்டர் PDG E.K சகாதேவன் ஆகியோரால் கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது. இதை அடுத்து ஈரோடு பப்ளிக் பள்ளி வளாகத்தில் இருந்து காலை 6:00 மணி அளவில் போதை தடுப்பு விழிப்புணர்வு உறுதி மொழியுடன் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், பெற்றோர்கள், பொதுமக்கள் என இப்பேரணி ஆனது தொடங்கியது.
மக்கள் சமுதாயத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் எதிராக உலக அளவில் எழுந்திருக்கும் பிரச்சனை போதை பழக்கம். இப்பழக்கமானது வயது வித்தியாசமின்றி சமுதாயத்தில் வேரூன்றியுள்ள காரணத்தால் இதனை ஒழிக்கும் நோக்கத்துடன் இப்பேரணையானது நடைபெற்றது.
இவ்விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்ட அனைத்து பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ், பதக்கம், டி-ஷர்ட் மற்றும் மரக்கன்று பரிசாக வழங்கப்பட்டது.