ஈரோடு பவானியை சேர்ந்த திருமதி. கவிதா ( 52 ) என்ற பெண்மணிக்கு வயிற்று பகுதியில் மிக பெரிய அளவில் வீக்கம் ஏற்பட்டதாலும் உடல் எடை வெகுவாக குறைந்து கொண்டு வந்தந்தாலும் ஈரோட்டில் உள்ள தனியார் (ஜெம்) மருத்துவமனையை அணுகினர். இங்கு அவருக்கு ரத்த பரிசோதனை மற்றும் ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனை முடிவில் பெண்ணின் கருப்பையில் 33 x 15x29 சென்டி மீட்டர் 10 கிலோ அளவிலான மிக பெரிய கட்டி வளர்ந்து உள்ளது. இது வயிற்றின் அடி பகுதியில் இருந்து மேல் நெஞ்சு பகுதி வரை வளர்ந்து உள்ளதாக மருத்துவர் உறுதிப்படுத்தினர்.
பின்னர் அவருக்கு மயக்கவியல் நிபுனரால் மயக்க மருத்து செலுத்தப்பட்டு அதிக ரத்தப் போக்கு இல்லமால் அவரது கருப்பை மற்றும் கட்டியை மருத்துவர் சதீஸ்குமார் மற்றும் செவிலியர் குழுவினரோடு வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை சுமார் 2:30 மணி நேரம் செய்து முற்றிலுமாக நீக்கப்பட்டது. தற்போது 53 வயது பெண் ஆரோக்கியத்துடன் உள்ளார் என டாக்டர் சதீஷ் குமார் தெரிவித்தார்.