ஈரோடு மாவட்டம், தாளவாடி, தலமலை, தொட்டபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ருத்ர ஜெய வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலின் சேவா அறக்கட்டளை மற்றும் ஈரோடு தினசரி காய்கறி சந்தை நண்பர்கள் இணைந்து மாதம் மாதம் அமாவாசையன்று ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி சந்தையில் அன்னதானம் வழங்குகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, நான்காவது மாத அமாவாசையை முன்னிட்டு 1000 க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக ஸ்ரீ ருத்ர ஜெய வீர ஆஞ்சநேயருக்கு மாலை அணிவித்து பூஜை செய்யப்பட்டது.