ஈரோடு பி. பெ. அக்ரஹாரத்தில் காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகளால் சுட்டு கொள்ளப்பட்டவர்களுக்கு மெழுகுவர்திகள் ஏற்றிய நிலையில் அஞ்சலி...
தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் ஆரிப் ஆணைக்கிணங்க ஈரோடு மாவட்ட தலைவர் ஜுபைர் அகமது தலைமையில், துணைத் தலைவர் பைரோஸ் கான், ஒருங்கிணைப்பாளர் ஆட்டோ இப்ராஹிம், ஏழாவது வார்டு தலைவி அமீனா ஆகியோர்கள் முன்னிலையில் 30-கும் மேற்பட்ட சிறுபான்மை துறையைச் சேர்ந்த நிர்வாகிகள் காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகளால் சுட்டு கொள்ளப்பட்டவர்களுக்கு மெழுகுவர்திகள் ஏற்றிய நிலையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் பயங்கரவாதிகளை கண்டித்து பேனர்களும், தாக்குதலில் பலியான அப்பாவி சுற்றுலா பயணிகளுக்கு மௌனமாக அஞ்சலி செலுத்திய நிலையில் மெழுகுவத்திகள் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.