இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
தேசப் பற்றை (நாட்டு பற்று), சகோதரத்துவம், சமத்துவம், சமூக ஒற்றுமை, சேவைக்குரிய மரியாதை மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விஷயங்களை மையப்படுத்தி அது குறித்து மாபெரும் விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்திட வேண்டும் என்று உயரிய லட்சியத்துடன் மாபெரும் கண்கவர் அணிவகுப்பு நிகழ்ச்சி உலக மனித உரிமைகள் ஆணையம் மற்றும் அகில இந்திய வழக்கறிஞர்கள் நலச்சங்கம் ( ஐவா) சார்பில் கடந்த 10.12.2024 அன்று சர்வதேச மனித உரிமைகள் தின நாளில் சென்னை, பெசன்ட் நகர் பகுதியில் அமைந்துள்ள எலியட் கடற்கரையில் நடத்திட திட்டமிட்டு அந்த மாபெரும் அணிவகுப்பில் ஆபீஸர் ட்ரெய்னிங் அகாடமி (OTA) பேண்ட் முன்னிலை வகிக்க , தீயணைப்பு துறை வீரர்கள் பேண்ட், தமிழ்நாடு காவல்துறை பேண்ட் உள்ளிட்டவைகள் தொடர் அணிவகுப்பை சீர்தூக்கி செல்கிற வேளையில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் தங்களின் மேலான கலை நிகழ்ச்சிகளை நடத்தவும், சாரணர் இயக்கம், என் சி சி (NCC) மாணவர்கள் அணிவகுத்து செல்ல தொடர்ந்து பல்வேறு தரப்பு பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கும் வகையிலும் இந்த மாபெரும் அணிவகுப்பை மெட்ராஸ் ஐ ஐ டி இயக்குநர் டாக்டர். காமகோடி, இராணுவ அதிகாரிகள், கல்வித்துறை சார்ந்தோர், நீதித்துறை சார்ந்தோர் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்கவர் அணிவகுப்பின் மரியாதையை ஏற்று கொண்டு சிறப்பிக்கும் வகையிலும், சமுதாயத்தில் வாழும் சாதனையாளர்கள், நல்லோர்கள், பல்வேறு துறைகளில் திறன் மிகு சேவை புரிந்தோர், நேர்மையாளர்கள் உள்ளிட்டோரின் நன்மதிப்பை சமூகத்தில் உயர்ந்த அவர்களுக்கு அந்த அணிவகுப்பு நிகழ்வின் முடிவில் விருதுகள், பதக்கம், தங்க நாணயங்கள், ரொக்கப் பரிசு தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்க ஏதுவாக மாபெரும் பொருட்செலவில் இந்த கண்கவர் அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதற்காக தமிழ்நாடு முதலமைச்சர், தமிழக அமைச்சர் பெருமக்கள், சென்னை மாநகர மேயர், திரை உலக முக்கிய பிரபலங்கள், முன்னாள் தமிழ்நாடு காவல்துறை தலைவர்கள், இராணுவ அதிகாரிகள், முப்படை வீரர்கள், சமூக சாதனையாளர்கள், மிக முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோருக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டு அணிவகுப்பு பேரணியில் கலந்து கொள்ள அனைவரும் ஆர்வமாகவும் தயாராக இருந்தனர்.
மனித உரிமைகள் தின கண்கவர் அணிவகுப்பு பேரணிக்கு தமிழ்நாடு காவல்துறை அனுமதி வழங்க வேண்டி சென்னை மாநகர காவல்துறை ஆணையர் A. அருண் ஐபிஎஸ் யிடம் கடந்த 25.11.2024 அன்று உரிய மனு அளிக்கப்பட்டது. சென்னை மாநகர காவல்துறை உயர் அதிகாரிகள் அணிவகுப்பு பேரணிக்கு அனுமதி அளிப்போம் என்று அவர்கள் அளித்த பொய்யான வாக்குறுதிகளை நம்பி பல லட்சங்களை செலவழித்து பல ஆயிரம் பேர் அதிகாலை முதல் பெசன்ட் நகர் கடற்கரை பகுதிக்கு அணி அணியாக வாகனங்களில் படையெடுத்து வரத் தொடங்கி விட்டனர். இராணுவ வீரர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்ட அனைவரும் வரும் வந்து சேரும் வரை அனுமதி இருக்கிறது என்று கூறி விட்டு எழுத்துப்பூர்வமான அனுமதி முந்திய நாளே தர மறுத்ததோடு அணிவகுப்பில் கலந்து கொள்ள முன்வந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், அதிகாரிகள், சமூக அக்கறை கொண்ட மக்கள் உள்ளிட்ட அனைவரையும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அருண் ஐபிஎஸ் உத்தரவின் பேரில் ஆங்காங்கே தடுப்பு வேலிகளை அமைத்து பெசன்ட் நகர் கடற்கரை பகுதிக்கு வரவிடாமல் துரத்தி அடித்த தோடு பொய்வழக்கு போட்டு சிறையில் தள்ளி விடுவதாகவும் மிரட்டி உள்ளார்கள். இது சமயம் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்ய டாக்டர். எஸ் கே சாமி ஆகிய நான் செல்ல கூடாது என்பதை கருத்தில் கொண்டு எனக்கெதிராக சட்டவிரோத தடுப்பு காவலும் அருண் ஐபிஎஸ் ஆல் செய்யப்பட்டது.
அணிவகுப்பு நிகழ்ச்சி அறிவித்த நேரம் முடிந்த பிறகு ஏன்? எதற்காக இப்படி சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சட்டவிரோதமாக நடந்து கொள்கிறார்கள் என்பதை கேட்க சென்ற பொழுது ஒரு பெண் காவல் சார்பு ஆய்வாளரை மேலும் கிழுமாக பார்த்த வகையில் பெண் சித்திரவதை செய்யப்பட்டதாக ஒரு பொய்யான வழக்கை ஜோடித்து சித்தரித்து கைது செய்த சென்னை மாநகர காவல்துறை ஆணையர் A. அருண் ஐபிஎஸ், இணை ஆணையர், துணை ஆணையர், உதவி ஆணையர், காவல் ஆய்வாளர்கள் குறிப்பாக M.R. சிபி சக்கரவர்த்தி IPS, R. பொன் கார்த்திக் குமார் IPS, R. முருகேசன், ஆய்வாளர் R. பிரவின் ராஜேஷ், ஜெய பிரமிளா, A. அருள் ஜோதி முருகன், மதன் குமார் HC 36275, ஜெகன் லிங்கராஜா HC 33170, ஜெயமாலா WGRI61906, சாராதா WPC 52533 உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் என்னை வேனில் ஏற்றி காவல்நிலையம் அழைத்துச் சென்று மிகவும் கொடூரமாக தாக்கி பலத்த சித்திரவதை செய்து இராயப்பேட்டை அரசு மருத்துவமனை ஐ.சி.யூ வில் பல மணி நேரம் அவரச சிகிச்சை பெறச் செய்து மேலே குறிப்பிட்டுள்ள அதிகாரிகளிடம் இருக்கும் ஒட்டுமொத்த அதிகார பலத்தையும் பிரயோகித்து ரிமாண்ட் ஃபிட்னஸ் டாக்டரிடம் வாங்கி அவசர அவசரமாக நள்ளிரவு நேரத்தில் சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்ற நடுவரிடம் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்து நடுவர் நீதிமன்ற நீதிபதி உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவு பிறப்பித்த பிறகும் எந்தவிதமான மருத்துவ வசதிகள் எதையும் செய்து தராமல் தனிச் சிறையில் அடைத்து வைத்து மாபெரும் சித்திரவதை செய்துள்ளார்கள்.
A. அருண் ஐபிஎஸ் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளின் கொடூர சித்திரவதை குறித்து சைதாப்பேட்டை நீதிமன்ற நடுவரிடம் புகார் கொடுத்து மேற்படி A. அருண் ஐபிஎஸ் ஏற்கனவே மனித உரிமை மீறலில் ஈடுபட்டு அது தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் முழுமையான விசாரணையில் நிரூபணம் ஆகி A. அருண் ஐபிஎஸ் சட்டத்தால் தண்டிக்கப்பட வேண்டிய ஒரு குற்றவாளி என்றும் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் உரிய குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவையும், தமிழ்நாடு மாநில அரசு ரூபாய். 15000/- இழப்பீடு வழங்கி உள்ளதையும் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் அருண் ஐபிஎஸ் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசிற்கு உரிய உத்தரவு பிறப்பித்துள்ளது என்பதையும் ஆதாரபூர்வமாக நீதிமன்ற ஆணைகளோடு எடுத்துக் கூறி மேலும் சமீபத்தில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட மனித உயிர்கள் பலிக்கு காவல் ஆணையர் A. அருண் ஐபிஎஸ் ன் அதிகார மெத்தனபோக்கே காரணம் என்றும் அதுகுறித்து நடவடிக்கை எடுக்க தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் மேலும் தனியாக ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ள விஷயத்தையும் ஆதாரபூர்வமாக சுட்டி காட்டியும், சென்னை மாநகர காவல்துறை பதிவு செய்து உள்ள முதல் தகவல் அறிக்கையில் கூறுவது போல ஒரு சம்பவமே நடைபெற வில்லை என்பதை வீடியோ, ஆடியோ ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் நிரூபித்து இரண்டு நாட்களில் பிணை வாங்கியதையும், மனுதாரர் ஆகிய என் உயிருக்கும், உடமைக்கும் A. அருண் ஐபிஎஸ் ஆல் அடிக்கடி அச்சுறுத்தல்கள் மற்றும் ஆபத்து நேர்ந்து கொண்டு இருப்பதை சுட்டிக் காட்டி தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் கடந்த 19.12.2024 ந்தேதி அன்று புகார் மனு அளிக்கப்பட்டது.
இந்த புகாரை ஏற்றுக் கொண்ட தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழக்கு பதிவு (546/22/13/2025) செய்து தமிழ்நாடு காவல்துறை தலைவர் இது குறித்து அவசர அறிக்கையை 15 நாட்களில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது, என குறிப்பிட்டுள்ளார்.