ஈரோடு மாவட்டம், தாளவாடி, தலமலை, தொட்டபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ருத்ர ஜெய வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலின் சேவா அறக்கட்டளை மற்றும் ஈரோடு தினசரி காய்கறி சந்தை நண்பர்கள் இணைந்து, ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி சந்தையில் அன்னதானம் வழங்குகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, 6 வது மாத அமாவாசையை முன்னிட்டு தொட்டபுரம் ஆஞ்சநேயர் கோவிலிலும், ஈரோடு காய்கறி மார்க்கெட்டிலும் 1000 க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த அன்னதான நிகழ்ச்சியில் லட்டு, தக்காளி சாதம், போண்டா போன்றவைகள் வழங்கப்பட்டன. முன்னதாக ஸ்ரீ ருத்ர ஜெய வீர ஆஞ்சநேயருக்கு மாலை அணிவித்து பூஜை செய்யப்பட்டது.
நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் இந்த அன்னதான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினர். தொடர்ந்து இதுபோன்று ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று அன்னதானம் வழங்கப்படும் என அறக்கட்டளையின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஈரோடு மதுவிலக்கு டிஎஸ்பி சண்முகம், ஈரோடு விஐபி கிளாஸ் ஹவுஸ் உரிமையாளர் ரத்தன் ஜி, பள்ளிபாளையம் மீனா தியேட்டர் உரிமையாளர் சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.