ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள டிவைன் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் (21.06.2025) சனிக்கிழமை 11-வது சர்வதேச யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த விழாவினை, டிவைன் பள்ளி மற்றும் உலக சமாதான அறக்கட்டளை இணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இச்சிறப்புமிகு விழாவிற்கு பரஞ்ஜோதி யோக கல்லூரியின் அறங்காவலர் மற்றும் இயக்குனர் பள்ளிபாளையம் பல்லவா குரூப்ஸ் வி.எஸ். பழனிச்சாமி தலைமையேற்றார்.
மெய்ஞானாசிரியர் பெருமக்களும், பரஞ்ஜோதி யோகா கல்லூரியின் அறங்காவலர்களும், யோகா வகுப்பு மெய் அன்பர்களும், டிவைன் பள்ளி ஆசிரியர்களும், பெற்றோர்களும், அலுவலக அன்பர்களும் கலந்து கொண்டு யோகா தினத்தை கொண்டாடினார்கள்.
இந்த நிகழ்விற்கு மெய்ஞானசிரியர் ஜி.ஜெயலட்சுமி வரவேற்புரை வழங்கினார். யோகா தினத்தின் வழிமுறைகளை பின்பற்றி யோகா வகுப்பினை மெய்ஞானாசிரியர்கள் மற்றும் மெய்ஞானாசிரியரும் மேலாளருமான சுப்பிரமணியன் அவர்கள் நடத்தினார்கள். பள்ளியின் முதல்வர் கே.தேவகி வருகை புரிந்த அனைவருக்கும் பள்ளியின் சார்பில் நன்றியினை தெரிவித்தார்.