Type Here to Get Search Results !

கானகக் காதலனின் புத்தக வெளியீடு... "காடு எனது கனவு தேசம்".


ஈரோடு VET IAS கல்லூரியில், LIVING WITH NATURE GROUP சார்பில், NCBH வெளியீட்டில் 18.07.2025 அன்று பேராசிரியர் P. கந்தசாமி (Camp Director and Resource Person Eco Educational Nature camps, Former Hon. Wildlife Warden - Sathyamangalam Tiger Reserve) அவர்கள் எழுதிய "காடு எனது கனவு தேசம்" என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது .
 
இப்புத்தக வெளியீட்டு விழாவில் முன்னாள் DGP Dr. C. சைலேந்திர பாபு, I.P.S., அவர்கள் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். 



இந்த புத்தக வெளியீட்டு விழாவில் திரு. T. ஸ்டாலின் குணசேகரன் (President, Makkal
Sinthanai Peravai & Chairman NCBH) அவர்கள், Dr. L.M. ராமகிருஷ்ணன் (Chairman, Bharathi Vidya bhavan C.S. Academy) அவர்கள், திரு. S.D. சந்திரசேகர் (secretary, Vellalar Educational Trust) அவர்கள், திரு. C. தேவராஜன் (Chairman & Managing Director URC group of companies) அவர்கள், Dr. S. குணசேகரன் (Chairman, Vettri Vikas Public School & M.D, Vidya Vikas Group of Institutions) அவர்கள், Mrs. வித்யா செந்தில் (Managing Trustee, Agastya Academy & Rajendran Institutions) அவர்கள், Ms. ரத்னா வர்ஷினி.C., (Director, Ashok travels, G.D.School, Grand Regent, Coimbatore) அவர்கள், திரு. P. பாலசுப்ரமணியம் (Advocate) அவர்கள், CA. E.P. கதிர்வேல், FCA., அவர்கள், Dr. N. கோவிந்தசாமி ஆகியோருடன் பள்ளி மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.





புத்தக ஆசிரியர் கந்தசாமி மற்றும் அவரது புத்தகம் குறித்து சைலேந்திரபாபு I.P.S., அவர்கள் தெரிவித்துள்ள
கருத்தில், 

"பேராசிரியர் ப. கந்தசாமி அவர்கள் ஒரு சிறந்த அறிவு பேழையை நம் தமிழ் சமுதாயத்திற்கு வரைந்துள்ளார். இந்த இயற்கையின் அறிவியல் நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இந்தியா முழுவதும் இளைஞர்கள் கையில் சேர்க்க    வேண்டும்    என்று    நான்    விரும்புகிறேன்.      பேராசிரியர் 
ப. கந்தசாமி அவர்கள் கௌரவ வனக்காப்பாளராக 1996 ஆம் ஆண்டு முதல் இன்று வரை பணியாற்றியவர், அதோடு அவர் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை வனக்காப்பகங்களுக்கு அழைத்துச் சென்று காடுகள் மலைகள், விலங்குகள், தாவரங்கள் என்பன பற்றி விளக்கியுள்ளார்.



40 ஆண்டுகள் அவர் வழங்கிய இயற்கையைப் பற்றிய 
கல்வியை ஒரு நூலாக வெளியிட்டுள்ளார் ஆசிரியர். நூலில் இந்த பூமி எப்படி தோன்றியது அதில் முதல் வெடிப்பு (Big Bang) முதல் முதல் மழை (First Rain) வரை என்று இந்த பூமியின் தோற்றத்தை இளைஞர்களுக்கு எளிதில் எடுத்துரைக்கிறார். அதைத் தொடர்ந்து அவர் பலவிதமான காடுகளை  தெளிவாக விளக்குகிறார். அதற்கான புகைப்பட ஆதாரத்தையும் எடுத்து தருகிறார்.” என குறிப்பிட்டு இருந்தார்.











Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.