கோபிசெட்டிபாளையதில், சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்ட நிர்வாகம், கலால் பிரிவு, காவல் துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை ஆகிய துறையினர் இணைந்து நடத்திய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இப்பேரணியை, கோபி DSP முத்தரசு துவக்கி வைத்தார். இதில் பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியர்கள் 600-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு போதை பொருள்களை ஒழிப்பது குறித்து முழக்கங்களை எழுப்பி பேரணியாக சென்றனர்.
நிகழ்ச்சியில், கோபி இன்ஸ்பெக்டர் தமிழரசு, மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் கவிதா, கோபி தாசில்தார் சரவணன், காவல் துறையினர் என பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் - சிவக்குமார்.