Type Here to Get Search Results !

இந்திய இராணுவத்தின் அக்னிவீர் ஆட்சேர்ப்பு பேரணி 2025 - ஈரோட்டில் நடைபெற உள்ளது...


கோயம்புத்தூர் இந்திய இராணுவத்தின் அக்னிவீர் ஆட்சேர்ப்பு பேரணி 2025 ஈரோடு மாவட்டத்தில் 26.8.2025 முதல் 07.09.2025 வரை ஈரோடு மாவட்டம், வ.உ.சி பூங்கா, விளையாட்டு வளாகத்தில் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி,  திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, மதுரை மற்றும் தேனி ஆகிய 11 மாவட்டங்களிலிருந்து அக்னி வீர் ஜெனரல் டூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் கிளர் / ஸ்டோர் கீப்பர், அக்னிவீர் டிரேட்ஸ்மேன் (10 ஆம் வகுப்பு தேர்ச்சி), அக்னிவீர் டிரேட்ஸ்மேன் (8 ஆம் வகுப்பு தேர்ச்சி) தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள்.

மேலும், மத்திய வகைகள் சிப்பாய் தொழில்நுட்ப நர்சிங் உதவியாளர், சிபாய் பார்மா, ஹவில்தார் (கல்வி), ஹவில்தார் (சர்வேயர் தானியங்கி வரைபடவியலாளர்), மத ஆசிரியர் ஜூனியர் கமிஷன் அதிகாரி, ஜூனியர் கமிஷன் அதிகாரி (கேட்டரிங்) தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள்.

அக்னிவீர் ஜிடி வகைக்கு ஆகஸ்ட் 26 அன்று தர்மபுரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்தோருக்கும், ஆகஸ்ட் 27 அன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தோருக்கும், ஆகஸ்ட் 28 அன்று கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி மற்றும் மதுரை மாவட்டங்களை சேர்ந்தோருக்கும், ஆகஸ்ட் 29 மற்றும் 30 ஆகிய நாட்களில் மதுரை மாவட்டத்தை சேர்ந்தோருக்கும் ஆட்சேர்ப்பு பேரணி நடைபெற உள்ளது.

அக்னிவீர் ஜிடி, கிளர்க் / எஸ்கேடிடி வகைக்கு ஆகஸ்ட் 31 அன்று கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தேனி மற்றும் மதுரை மாவட்டங்களை சேர்ந்தோருக்கும், அக்னிவீர் ஜிடி/ தொழில்நுட்பம் (8 - ஆம் வகுப்பு) வகைக்கு செப்டம்பர் 1 அன்று நாமக்கல், தர்மபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தேனி மற்றும் மதுரை மாவட்டங்களை சேர்ந்தோருக்கும், அக்னிவீர் ஜிடி/ தொழில்நுட்பம் (10 ஆம் வகுப்பு) வகைக்கு செப்டம்பர் 2 அன்று கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி, திண்டுக்கல், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, தேனி மற்றும் மதுரை மாவட்டங்களை சேர்ந்தோருக்கும் ஆட்சேர்ப்பு பேரணி நடைபெற உள்ளது.

மத்திய வகைகள் செப்டம்பர் 3 மற்றும் 4 அன்று தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம். தெலுங்கானா, புதுச்சேரி யூனியன் பிரதேசம் (காரைக்கால், யானம், புதுச்சேரி) ஆகிய பகுதிகளுக்கும் ஆட்சேர்ப்பு பேரணி நடைபெற உள்ளது. செப்டம்பர் 5 அன்று மருத்துவ பரிசோதனைகள் நடைபெற உள்ளது.

செப்டம்பர் 6 மற்றும் 7 ஒதுக்கீட்டு நாட்கள் ஆகும். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்ப தாரர்களுக்கு அனுமதி அட்டைகள் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.

இந்த ஆட்சேர்ப்பு முறையே முற்றிலும் வெளிப்படையானது மற்றும் திறமையை அடிப்படையாக கொண்டது என்பதால், விண்ணப்பதாரர்கள் மோசடி செய்யும் ஏஜென்ட்டுகளிடம் ஏமாற வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அக்னிவீர் ஆட்சேர்ப்பு பேரணிக்கான முன்னேற்பாடு பணிகள், தேர்வு நடைபெறும் இடங்கள், குடிநீர், தங்கும் இடம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அரசு அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.