15 வது தமிழ்நாடு பட்டாலியனின் தலைமை அதிகாரி லெப்டினட் கர்னல் கோபால கிருஷ்ணா மற்றும் மேலாண்மை அதிகாரி லெப்டினட் கர்னல் ராஜவேலு ஆகியோரின் வழிகாட்டுதலின் படி இல்லந்தோறும் தேசியக் கொடி என்ற விழிப்புணர்வு பேரணியை 15.08.2025 -ம் தேதியன்று பவானி லட்சுமி நகரில் தேசிய மாணவப்படை மாணவ மாணவியர்கள் நடத்தினர்.
இவ்விழிப்புணர்வு பேரணியில், ஸ்ரீ வாசவி கல்லூரி, ஜே கே கே என் கல்லூரி, எக்ஸல் கல்லூரி மற்றும் SSM பாலிடெக்னிக் கல்லூரியின் தேசிய மாணவப்படை மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வினை, ஈரோடு வித்தியா சங்கத்தைச் சேர்ந்த G. ராஜரத்தினம், ஸ்ரீ வாசவி கல்லூரியின் முதல்வர் (பொ) முனைவர் G. மலர்விழி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்நிகழ்வினை லெப்டினட் முனைவர் M. சரவணராஜா ஒருங்கிணைத்திருந்தார்.