இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற புதிய தலைமுறை சீனியர் எடிட்டர் ஆர். விஜயன் பேசியதாவது,
"மாணவர்களின் இலக்கானது தன் வாழ்நாள் முழுவதும் ஒளிரும் விளக்கினை போல் இருக்க வேண்டும். முடிவு எடுப்பவனே ஜெயிப்பான், அப்துல்கலாம் சொன்னது போல் மூச்சை நிறுவத்துவது மரணம் அல்ல, முயற்சியை நிறுத்துவதே மரணம். ஒலிம்பிக்கில் ஓடுபவனுக்கே ஒரு நொடியின் அற்புத தருணம் தெரியும். மேலும் AI நிறைந்த உலகில் புத்தக கவனச்சிதறல் என்பது இயற்கையே. அதனால் யார் ஒருவர் மொபைல் போனை சிறந்த முறையில் கையாள்கிறானோ அவனே வாழ்க்கையில் மிகச்சிறந்த மனிதன் ஆகிறான். நல்ல நண்பர்களை தேர்ந்தெடுத்தல் என்பதும் மிக முக்கியம் வாய்புக்கள் கொட்டிக் கிடக்கும் உலகில் தேடல் என்பது விரல் நுனியில் மொபைல் போனில் உள்ளது .அந்த தேடலை தேடுபவனே மிகச் சிறந்த நிலையை அடைகிறான் உன்னை தகுதி படுத்திக் கொள்ள உழைப்பு முயற்சி இருக்க வேண்டும். விடாப்பிடிஉழைப்பு இருந்தால் அதுவே உனக்கு வெற்றிப்படி உங்கள் பெயரை மேற்கோள் காட்டுகின்ற அளவிற்கு போட்டி நிறைந்த உலகத்தில் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்", என்று பேசினார்.