நமது தாய்திருநாட்டின் 79- வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில் ஈரோடு எக்ஸ்லண்ட் அரிமா சங்கம் மற்றும் ஈரோடு எல்லோ சன் சிட்டி அரிமா சங்கம் சார்பில், சுதந்திர தின விழா கொடியேற்றம் நிகழ்ச்சி (15.08.2025) இன்று பழையபாளயத்திலுள்ள தி ஐ பவுன்டேஷன் வளாகத்தில் நடைபெற்றது.
முன்னாள் மாவட்ட ஆளுநர் அரிமா பூர்ணிமா டன்னா அவர்கள் முன்னிலையில், ஈரோடு எக்ஸலண்ட் அரிமா சங்க தலைவர் அரிமா T.S.P. தாமோதரன் அவர்கள் கொடியேற்றினார்.
இதில், ஈரோடு எல்லோ சன் சிட்டி அரிமா சங்க தலைவர் அரிமா T. மகேஸ்வரி அவர்கள் வரவேற்புரையாற்றினார். வட்டார தலைவர் அரிமா N. சேகர், மூத்த தலைவர் அரிமா P. கணேசன், அரிமா கௌரி கணேசன் அவர்கள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்நிகழ்வில், அரிமா S. வெங்கடேசன், அரிமா K.P. தங்கராசு, அரிமா காஜா மைதீன், அரிமா S.N. மாதேஸ்வரன், அரிமா V. தனலட்சுமி ஆகியோர் மற்றும் ஈரோடு எக்ஸலண்ட் அரிமா சங்க செயலர் (நிர்வாகம்) அரிமா J. தீபன்ராஜ், செயலர் (சேவை) அரிமா S. சுப்ரமணியம், பொருளர் அரிமா E.N.முகம்மது உவைஸ், ஈரோடு எல்லோ சன் சிட்டி அரிமா சங்க செயலர் அரிமா S. ரேவதி சரவணன், பொருளர் அரிமா P. சுசீலா, அரிமா பிரேமாவதி, அரிமா ஈ. தனஞ்ஜெயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.