இந்து அன்னையர் முன்னணி கோபி தெற்கு நகர் சார்பில், மஞ்சள் நீர் அபிஷேகம் நிகழ்ச்சி இந்து முன்னணி மாவட்டசெயலாளர் மணிகண்டபிரபு தலைமையில், இந்து அன்னையர் முன்னணி மாவட்ட செயலாளர் கிருத்திகா முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், ஜி டி முரளிதரன் அவர்கள் கொடியசத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதில், சிறப்பு அழைப்பாளர்களாக இந்து முன்னணி கோட்டச்செயலாளர் குறிஞ்சி N.சேகர், இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருப்பூர் P.நடராஜ், இந்து அன்னையர் முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் V. ஜெயபாரதி, ஈரோடு மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீ பாலமுருகன், ஈரோடு மேற்கு மாவட்ட துணைத் தலைவர் கார்த்திக் சிதம்பரம், பாஜக கோபி நகர பொதுச்செயலாளர் மணிகண்டன், பாஜக மாவட்ட துணைத் தலைவர் ஜெயந்தி முருகையன் ஆகியோர் கலந்து கொண்டனர்.