Type Here to Get Search Results !

சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை...


ஈரோடு, 46 புதூர், ஆனக்கல்பாளையம், ஆயுதப்படை மைதானத்தில் இன்று (15.08.2025) நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி, இ.ஆ.ப., அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.




இதனைத்தொடர்ந்து காவல் துறையினரின் அணிவகுப்பினை பார்வையிட்டு, அணிவகுப்பு மரியாதையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஏற்றுக்கொண்டார். பின்னர் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட 79 சுதந்திர போராட்ட வீரர் மற்றும் அவர்தம் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசினை வழங்கினார். மேலும் மூவர்ண பலூன்களை பறக்கவிட்டார்.




தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறை. முன்னாள் படை வீரர் நலத்துறை, வனத்துறை, தீயணைப்புத்துறை, தேசிய மாணவர் படை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வணிகவரித்துறை. ஈரோடு மாநகராட்சி, பேரூராட்சிகள் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை பெருந்துறை, இணை இயக்குனர் (நலப்பணிகள்), பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் (தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டம்), சித்த மருத்துவம், முதலமைச்சர் விரிவான காப்பீடு திட்டம், 108 அவசர கால சேவை, பொதுப்பணித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பள்ளிக்கல்வித்துறை, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, கருவூலம் மற்றும் கணக்கு துறை, கூட்டுறவு துறை, பதிவுத்துறை, நில அளவு மற்றும் பதிவேடுகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை. வேளாண்மை பொறியியல் துறை, மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் வேலைவாய்ப்பு துறை, சமூக நலத்துறை. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம், மகளிர் திட்டம், தொழிலாளர் நலத்துறை, மாவட்ட தொழில் மையம், போக்குவரத்து துறை, இந்து சமய அறநிலையத்துறை, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம். மீன்வள நலத்துறை. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மின் ஆய்வுத்துறை, பொது நூலகத்துறை, தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம், தமிழ்நாடு ஆதி திராவிட வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம், மாவட்ட ஊராட்சி அலுவலகம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (தேர்தல்), இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை (பள்ளி மாணவி). தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக மூன்று தன்னார்வலர்கள் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பாக 2 தன்னார்வலர்கள் என மொத்தம் 145 சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.




அதனைத் தொடர்ந்து இன்றைய விழாவில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் வெற்றி பெற்ற 4 விவசாயிகளுக்கு ரூ.50,000 பரிசுத்தொகை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு நிரந்தர மண்புழு உர கூடம், 500 சதுர மீ அளவிலான நிழல் வலை குடில் அமைப்பதற்கு ரூ.2,27,500 மானியம், ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் தாட்கோ சார்பில் வேளாண்மை நிலம் வாங்க தாட்கோ நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம், சென்ட்ரிக் தொழில் மற்றும் லெதர் பேக் மற்றும் ரெக்சின் தொழில், பயணியர் வாகனம், காலணி தயாரிப்பு, விற்பனை கடை வைத்தல் மற்றும் சவுண்ட் சர்வீஸ் தொழில் ஆகியவற்றுக்கு தாட்கோ CM ARISE திட்ட மூலம் 10 பயனாளிகளுக்கு ரூ.92,22,000 மானியம், தொழிலாளர் நலத்துறை சார்பில் கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கிற்கு 15 பயனாளிகளுக்கு ரூ.1,90,000 மதிப்பில் நிதி உதவி. கூட்டுறவு துறை சார்பில் 5 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.73,00,000 கடனுதவி, மாவட்ட தொழில் மையம் சார்பில் 3 பயனாளிகளுக்கு கலைஞர் கைவினை திட்ட மற்றும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தின் கீழ் ரூ.17,18,000 கடனுதவி, முன்னாள் படை வீரர் நலத்துறை சார்பில் 1 பயனாளிக்கு தொகுப்பு நிதி கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் ரூ.50,000 கல்வி உதவித்தொகை என மொத்தம் 40 பயனாளிகளுக்கு ரூ.1,87,57,500 மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.





அதனைத் தொடர்ந்து, அரசு இசைப்பள்ளியின் சார்பில் மங்கள இசை நிகழ்ச்சியும். புஞ்சைபுளியம்பட்டி, கே.ஓ.எம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, மொடக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பர்கூர் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட பள்ளி, நஞ்சனாபுரம் கொங்கு நேசனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கொங்கம்பாளையம் எஸ்.வி.என் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சார்ந்த 540 மாணவ, மாணவியர்கள் கலை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பாராட்டுச்சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.




இவ்விழாவில், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ். ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி அ.சுஜாதா, மாவட்ட வருவாய் அலுவலர்  சு.சாந்த குமார். திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை திருமதி பிரியா, மாநகராட்சி ஆணையாளர் அர்பித் ஜெயின், உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி. காஞ்சன் சௌதரி, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் திருமதி.சிந்துஜா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் முஹம்மது குதுரத்துல்லர் (பொது),  செல்வராஜன் (வளர்ச்சி), தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்)  செல்வராஜ், முதன்மை கல்வி அலுவலர் சுப்பாராவ், ஈரோடு வருவாய் வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன் உட்பட காவல் துறையினர், அரசு உயர் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.














Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.