Type Here to Get Search Results !

ஈரோடு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் 79 -வது சுதந்திர தின விழா...


ஈரோடு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இந்திய திருநாட்டின் 79 -வது சுதந்திர தின விழா (15.08.2025) கொண்டாடப்பட்டது. ஈரோடு முதன்மை மாவட்ட நீதிபதி மாண்புமிகு  S.சமீனா, B.A., L.L.B.,  அவர்கள் தலைமையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.    





ஈரோடு பார் அசோசியேசன் தலைவர் T.சரத் சந்தர் (வழக்குரைஞர்), ஈரோடு அட்வகேட் அசோசியேசன் தலைவர் T.கோபால்ராசு, (வழக்குரைஞர்), ஈரோடு பார் அசோசியேசன் செயலாளர் K.பிரகாஷ், (வழக்குரைஞர்), ஈரோடு அட்வகேட் அசோசியேசன் செயலாளர் M.அருள்முருகன் (வழக்குரைஞர்) ஆகியோர் முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.





இதில், ஈரோடு முதன்மை சார்பு நீதிபதி K. P. இளவரசி, B.A., B.L., அவர்கள் வரவேற்புரையாற்றினார். ஈரோடு பார் அசோசியேசன் தலைவர், ஈரோடு அட்வகேட் அசோசியேசன் தலைவர், அரசு வழக்கறிஞர் M.அருட்செல்வன், அரசு வழக்கறிஞர் S.V.வாசுதேவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஈரோடு வழக்கறிஞர்களின் எழுத்தாளர்களின் நலச்சங்கத் தலைவர் கா. பா. ஆறுமுகம் அவர்கள் வாழ்த்துரை ஆற்றினார்.





ஈரோடு ரயில்வே மேல்நிலைப் பள்ளி மூன்றாம் வகுப்பு மாணவி M. மேகவர்த்தினி மற்றும் திருச்செங்கோடு ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி ஆறாம் வகுப்பு மாணவி S.ரிதன்யா ஆகியோர் வரவேற்பு நடன நிகழ்ச்சியை வழங்கினர். சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரி மூன்றாம் ஆண்டு வேளாண் பொறியியல் மாணவர்  தருன் விக்னேஷ் தேசப்பக்தி பாடலை பாடினார். ஈரோடு கொங்கு கல்வி நிலைய ஆறாம் வகுப்பு மாணவர்  S.S.சிவகார்த்திக் சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவன் அவர்களை பற்றிய உரையாற்றினார். ஈரோடு யுனிக் அகாடமி சார்பாக மாணவிகள் S.அருணிகா, தக்ஷதா, தீக்ஷா,  அனித்ரா, லக்ஷமி, ரக்ஷிகா, ஸ்ரீநந்தனா ஆகியோர் குழு நடன நிகழ்ச்சியை வழங்கினர். குமராபாளையம் JKKN கல்வி நிறுவனம், இரண்டாம் ஆண்டு BCA மாணவர்  G.தனசீலன் நடன நிகழ்ச்சியை வழங்கினார்.





V.A. லோகநாதன் (Deputy Chief Legal Aid Defence Counsel, Erode) அவர்களால் வழங்கப்பட்ட, கையால் இயக்கும் மூன்று சக்கர வண்டி பழனி என்ற 81 வயது முதியவருக்கு வழங்கப்பட்டது. L.திருஞானசம்மந்தம் (Chief Legal Aid Defence Counsel, Erode)  அவர்களால் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.


ஈரோடு முதன்மை மாவட்ட நீதிபதி மாண்புமிகு  S.சமீனா, B.A., L.L.B.,  அவர்கள் தலைமையுரையாற்றி,  பரிசுகளை வழங்கினார்.     
ஈரோடு இரண்டாம் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி G.சரண்யா, B.A., B.L., நன்றியுரையாற்றினார்.



இந்நிகழ்ச்சிகளில்,  K. உதயகுமார் (Protocal Officer) அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.











Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.