Type Here to Get Search Results !

குழந்தைகளின் சிலம்பாட்டத்துடன் தொடங்கப்பட்ட தமிழ் மினிட்ஸ் மாத இதழின் வெளியீட்டு விழா‌...


தமிழர்களின் சிறப்புகளை உலகத்திற்க்கு  எடுத்துரைக்கும் நோக்குடன் தொடங்கப்பட்டுள்ள  தமிழ் மினிட்ஸ் மாத இதழின் தொடக்க இதழ் வெளியீட்டு விழா 02.08.2025 -ம் தேதி  சனிக்கிழமை அன்று சென்னை சூரப்பட்டிலுள்ள S S கிளாசிக் ஏசி ஹாலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழர்களின் பெருமையை போற்றும் வகையில் பள்ளிக் குழந்தைகளின் சிலம்பாட்டத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ் மினிட்ஸ் மாத இதழின் ஆசிரியர்  மற்றும் வெளியீட்டாளர் ஈ. தனஞ்ஜெயன் அவர்கள் தலைமையில் தொடங்கப்பட்ட வெளியீட்டு விழாவில் S. சண்முகசுந்தர் (News Tamil 24x7 channel & Tamilnadu Cable Operaters Association) அவர்கள், திருமலை அழகன் (திருக்குறள் உரையாசிரியர், பேச்சாளர் மற்றும் திரைப்பட நடிகர்) அவர்கள், ராமமூர்த்தி (நீதித்துறை) அவர்கள், வேல்முருகன் (ஆல் இந்தியா பிரஸ் மீடியா அசோசியேஷன் தலைவர்) அவர்கள், ராஜேந்திரன் (அனைத்து இந்திய பத்திரிக்கை ஆசிரியர் & வெளியீட்டாளர் சங்க தலைவர்) அவர்கள், R.K. கோபிநாத் (நடிகர், எழுத்தாளர் & பேச்சாளர்) அவர்கள், P. துரை பாபு (CVPA செயலாளர்) அவர்கள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.


மேலும், தமிழ் மினிட்ஸ் மாத இதழின் துணை ஆசிரியர்களான A.பிரபாகரன் மற்றும் N.ஸ்ரீனிவாசன், இணை ஆசிரியர்களான K.K. ஹரிதாஸ் மற்றும் S. ராமலிங்கம், நிர்வாக ஆசிரியர்: விஜயகுமார் ஆகியோர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.