ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 1 முதல் 7 வரை உலக தாய்ப்பால் வாரம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஒரு கருத்து வைக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான கருத்தாக “நிலையான ஆதரவு அமைப்புகளை உருவாக்குவோம்” என்ற நோக்கில் ஈரோடு எக்ஸலன்ட் அரிமா சங்கம் மற்றும் ஈரோடு எல்லோ சன்சிட்டி அரிமா சங்கம் சார்பில் 08.08.2025 இன்று ஈரோடு S P ஆபீஸ் அருகில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
இதில்,
"🔷குழந்தை பிறந்து ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்கலாம்.
🔷முதல் மூன்று நாட்களில் சுரக்கும் சீம்பால் குழந்தைக்கு மிகவும் நல்லது. இதில் நோய் எதிர்ப்பு சக்தி, நியாபக சக்தி, சிந்தனைத் திறன், அறிவுக்கூர்மை அனைத்தும் கிடைக்கும்.
🔷முதல் 6 மாதம் குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே போதும்.
🔷இரண்டு வயது வரை தாய்ப்பால் கொடுக்கலாம். இதனால் தாய்க்கும், குழந்தைக்கும் நெருக்கம் அதிகமாகும். கர்ப்பப்பை நன்கு சுருங்கும். மார்பகப் புற்று நோய், சினைப்பை, கர்ப்பப்பை புற்றுநோய் வருவதைத் தடுக்கலாம்.
🔷குழந்தையின் குடலுக்கு நல்ல கிருமிகள் கிடைத்து ஜீரணசக்தி அதிகரிக்கிறது. சர்க்கரை நோய், புற்றுநோய், அலர்ஜி சம்பந்தமான நோய்கள் வருவது தவிர்க்கப்படுகிறது. உடல் எடையைப் பராமரிக்கிறது.
🔷தாய் ஒரு மார்பில் முழுவதும் கொடுத்து விட்டு பிறகு மறு மார்பில் முழுவதும் கொடுக்க வேண்டும்.
🔷தாய்ப்பால் நன்கு சுரக்க தண்ணீர் அதிகம் குடிக்கவும். பால், பூண்டு, வெந்தயம் மற்றும் சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
🔷தாய்ப்பால் கொடுக்கும் போது மன அழுத்தம் இல்லாமல் சந்தோஷமாக நம்பிக்கையுடன் இருந்தால் தாய்ப்பால் நன்கு சுரக்கும்."
என்ற தாய்பால் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்டு இருந்தது.
இந்நிகழ்வில், மண்டல தலைவர் அரிமா சபாபதி, ஈரோடு எக்ஸலன்ட் அரிமா சங்க தலைவர் அரிமா T.S.P. தாமோதரன், செயலர்(நிர்வாகம்) அரிமா J. தீபன் ராஜ், செயலர் (சேவை) அரிமா S. சுப்ரமணியம், பொருளாளர் அரிமா E.N. முகம்மது உவைஸ், உடனடி முன்னாள் தலைவர் அரிமா மோகன், முன்னாள் தலைவர் மற்றும் இயக்குனர் S. N. மாதேஸ்வரன், இரண்டாம் உதவி தலைவர் K. P. செல்வராஜ்,
ஈரோடு எல்லோ சன்சிட்டி அரிமா சங்க தலைவர் அரிமா T. மஹேஸ்வரி, செயலர் (நிர்வாகம்) அரிமா S. ரேவதி சரவணன், பொருளாளர் அரிமா P. சுசிலா, அரிமா ரேணுகாதேவி, அரிமா S. பிரசன்னா, அரிமா ஈ. தனஞ்ஜெயன் ஆகியோர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.