தி கொங்கு வேளாளர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ட்ரஸ்ட்டின் கீழ் இயங்கி வரும் கொங்கு இயற்கை மற்றும் யோகா மருத்துவக்கல்லூரியின் (B.N.Y.S.) 2020-2021 கல்வி ஆண்டில் சேர்க்கை பெற்று இந்த கல்வியாண்டில் இறுதியாண்டை முடித்த மாணவர்களுக்கு விடைபெறும் நிகழ்ச்சி கொங்கு பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள காலிங்கராயன் அரங்கத்தில் 25.08.2025 திங்கட்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவினை தி கொங்கு வேளாளர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ட்ரஸ்ட்டின் தலைவர் மருத்துவர் குமாரசாமி தலைமை வகித்து தலைமையுரையாற்றினார். உயர்ந்த நெறிகளும் ஒழுக்கங்களும் கொண்ட சிறந்த மருத்துவராக இருப்பது எப்படி என்பதை வலியுறுத்தி உரையை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் மருத்துவர். பிரதாப் சிங் விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள், அறக்கட்டளை உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களையும் நிகழ்ச்சியில் வரவேற்று பேசினார். கொங்கு இயற்கை மற்றும் யோகா மருத்துவக்கல்லூரியின் தாளாளர் வெங்கடாச்சலம் இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரையும் வரவேற்றுப் பேசினார்,
கொங்கு பொறியியல் கல்லூரியின் தாளாளர் இளங்கோ பேசுகையில், கல்லூரியின் மதிப்புகளையும் கொள்கைகளையும் வலியுறுத்தி மாணவர்கள் அவற்றை வாழ்க்கைப் பயணத்தில் முன்னெடுக்க வேண்டும், என அறிவுறுத்தினார். தி கொங்கு வேளாளர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ட்ரஸ்ட்டின் பராம்பரிய உறுப்பினார் கே.கார்த்திக்கேயன் பேசுகையில் பாரம்பரிய மருத்துவத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து மாணவர்கள் அதில் சிறந்து விளங்க வலியுறுத்தினார்.
இவ்விழாவிற்கு பெங்ளூரில் அமைந்துள்ள SVYASA யோகா மற்றும் இயற்கை மருத்துவக்கல்லூரியின் துணை முதல்வர் மருத்துவர் ஜின்ஸி சுந்தரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இறுதி ஆண்டு மாணவர்களுக்கான எதிர்கால வேலைவாய்ப்புகள் பற்றிய உரையாற்றி மாணவர்களுக்கு புதிய சிந்தனையையும் உற்சாகத்தையும் ஊட்டினார்.
மேலும் முக்கிய நிகழ்வாக ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்காக கல்லூரிகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்(MOU) மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து தி கொங்கு வேளாளர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ட்ரஸ்ட்டின் துனை தலைவர் ஈ.ஆர். கே.கிருஷ்ணன் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் பல்கலைகழகத்தேர்வில் வெற்றி பெறும் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ரூ-10000, இரண்டாம் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ரூ.5000 என பரிசுத்தொகை வழங்குவதாக உறுதியளித்தார். இது ஒவ்வொரு கல்லூரி ஆண்டு விழாவில் வழங்கப்படும் என அறிவித்தார்.
கொங்கு நேசனல் மெட்ரிக்குலேசன் பள்ளியின் தாளாளர் தேவராஜா, கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளர் தங்கவேல், தி கொங்கு வேளாளர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ட்ரஸ்ட்டின் பராம்பரிய உறுப்பினர் பி.சச்சிதானந்தன் தங்கள் வாழ்த்துகளை வழங்கி மாணவர்களை எதிர்காலத்தில் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க ஊக்குவித்தனர்.
கல்லூரி சார்பில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் இறுதியாக மருத்துவர் கார்திக் நன்றியுரை வழங்கினார்.