வணிகவரி வசூலிக்கும் உரிமையை பழையபடி மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பல மாநிலங்களில் வலுத்து வருகிறது, அவ்வாறு செய்தால் தவறு இல்லை என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்ரமராஜா கூறியுள்ளார். கோவை மண்டல இளைஞர் அணியின் "நமது இலக்கை நோக்கி" என்ற கலந்துரையாடல் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது.
அப்போது அவர் செய்தியாளர் சந்திப்பில், ஜிஎஸ்டி வரி திருத்தம் கொண்டு வருவதாக பிரதமர் அறிவித்துள்ளார். ஒரு அடுக்கு முறை வரி மட்டுமே வலியுறுத்துகிறோம். இது சம்பந்தமாக அடுத்த மாதம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து மனு அளிக்க உள்ளோம். திருச்சியில் வரும் 30 ஆம் தேதி அன்று
டி மார்ட் நிறுவன விரிவாக்கத்தை கண்டித்து முற்றுகை போராட்டம் நடைபெறும். கார்பரேட் நிறுவனங்கள் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடுவதால் உள்ளூர் வியாபாரம் பாதிக்கிறது. ஆன்லைன் மூலம் மருந்து மற்றும் பட்டாசு விற்பனையை தடை செய்ய வேண்டும். வணிக நல வாரிய உறுப்பினர்களாக புதிதாக ஒரு லட்சம் பேர் சேர்ந்துள்ளனர். பிளாஸ்டிக் பை உற்பத்தியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அதை விடுத்து வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சிறு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கார்பரேட் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போதை பொருள் விற்பனை செய்யும் வியாபாரம் மீது நடவடிக்கை எடுப்பதை வரவேற்போம். தமிழ் பெயர் பலகை வைக்க வியாபாரிகளை வலியுறுத்திகிறோம். இந்தி மொழி திணிக்க கூடாது. டிரேட் லைசன்ஸ் விதிமுறைகளை அரசு தளர்த்தி வருகிறது. பேரமைப்பு சார்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மார்க்கெட்டுகள் அமைக்க முடிவு எடுத்துள்ளோம். தெருவோர வியாபாரிகளுக்கு மாநகராட்சி அடையாள அட்டை வழங்க வேண்டும், போன்ற கருத்துக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், பேரமைப்பு மாவட்ட தலைவர் சண்முகவேலு, செயலாளர் பொ. இராமச்சந்திரன், இளைஞர் அணி தலைவர் லாரன்ஸ், ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.