Type Here to Get Search Results !

கொங்கு வேளாளர் தொழில்நுட்பக்கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் தின விழா...


1983 ஆம் ஆண்டு கொங்கு வேளாளர் சமுதாயத்தை சார்ந்த 41 புரவலர்களால் கொங்கு வேளாளர் தொழில்நுட்பக்கல்வி அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளையின் மூலம் கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி, கொங்கு பொறியியல் கல்லூரி, கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கொங்கு பிரைவேட் இண்டஸ்ட்ரியல் ட்ரைனிங் இன்ஸ்டிடியூட், கொங்கு நேஷனல் மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி 1 ஸ்கூல், கொங்கு நேச்சுரோபதி மற்றும் யோகா மெடிக்கல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிடல் ஆகிய 6 நிறுவனங்கள் நிர்வகிக்கப்படுகின்றன.  இந்நிறுவனங்கள் தமிழ்நாடு மட்டும் இல்லாமல் அகில  இந்நிறுவனங்களை நடத்திக் கொண்டு வரும் அறக்கட்டளையின் நிறுவனர் தினம் 23.08.2025 அன்று, கொங்கு பொறியியல் கல்லூரியின் கொங்கு பல்கலை மையத்தில் நடைபெற்றது. 



இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக, இந்த விழாவிற்கு டெல்லி தேசிய தலைநகர் பிரதேச அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் ஏ.அன்பரசு ஐ.ஏ.எஸ். அவர்கள் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். மேலும், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் இயங்கும்,டெல்லியில் உள்ள ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் தலைமை அலுவலகத்தின் பிராந்திய பி.எஃப். ஆணையர் பி.செந்தில் குமார் அவர்கள் இந்த இந்த விழாவிற்கு கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார். சம்பந்தப்பட்ட துறைகளில் நிறுவனங்களை உயர்நிலைக்கு கொண்டு வர அறக்கட்டளை மேற்கொண்ட முயற்சிகளை விருந்தினர்கள் பாராட்டினர். மேலும் அனைத்து நிறுவனங்களுக்கும் சிறந்த உள்கட்டமைப்பை உருவாக்கியதற்காகவும் அறக்கட்டளை உறுப்பினர்களை அவர்கள் பாராட்டினர். 



இந்நிகழ்வில் அறக்கட்டளையின் தலைவர் மருத்துவர் ஆர்.குமாரசாமி, செயலாளர்  பி.சத்தியமூர்த்தி, பொருளாளர் கே.வி.ரவிசங்கர், அனைத்து கல்வி நிறுவனங்களின் தாளாளர்கள், அறக்கட்டளையின் பாரம்பரிய உறுப்பினர்கள், கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பங்கேற்றனர்.












Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.