இந்திய கட்டுமான நிறுவன கூட்டமைப்பான ஈரோடு கிரடாய் அமைப்பின் சார்பில் ஈரோடு திண்டல் அருகே உள்ள டர்மரிக் ஓட்டலில் வீடு, வீட்டு மனை, அடுக்குமாடி குடியிருப்புகளின் ரியல் எஸ்டேட் கண்காட்சி துவக்க விழா (23.08.2025) இன்று நடைபெற்றது.
விழாவுக்கு கிரடாய் அமைப்பின் மாநில இணை செயலாளர் சதாசிவம் தலைமை தாங்கினார். மாநில கிரடாய் தலைவர் ஹபீப், ஈரோடு கிரடாய் தலைவர் ஈஸ்வரன், செயலாளர் மாணிக்கம், பொருளாளர். ராஜன், இணை செயலாளர் ஜெயபிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த திறப்புவிழா நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி, ஈரோடு MP கே. இ.பிரகாஷ் ஆகியோர் பங்கேற்று கண்காட்சியினை துவக்கி வைத்து, பார்வையிட்டனர்.
இந்த கண்காட்சியில், ஈரோடு, கோவையை சேர்ந்த 32 முன்னணி கட்டுமான நிறுவனங்களின் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில், SBI வங்கி பொதுமேலாளர் ஹரிதா பூர்ணிமா, கிரடாய் இணை செயலாளர் பாலசுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.