25-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நந்தா பொறியியல் கல்லூரி மற்றும் 17-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தொழில்நுட்ப கல்லூரிகளின் முதலாமாண்டு வகுப்புகளின் துவக்க விழா தொடங்கப்பட்டது.
இளநிலை மற்றும் முதுநிலை முதலாமாண்டு வகுப்புகளின் துவக்க விழாவினை ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் உறுப்பினர் திருமதி. பானுமதி சண்முகன் மற்றும் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட பிரபல இதழாளர், தொலைகாட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் ஊக்கமளிக்கும் பேச்சாளரான கோபிநாத் சந்திரன் ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் வி.சண்முகன் அவர்கள் தலைமையேற்று உரையாற்றுகையில், 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நந்தா பொறியியல் கல்லூரி மற்றும் 17வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தொழில்நுட்ப கல்லூரி ஆகிய இரண்டு கல்லூரிகளும் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலிடமிருந்தும், தேசிய அங்கீகார வாரியத்திடமிருந்தும் உயரிய தரச்சான்றிதழ் பெற்றுள்ளதில் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார். இதன் மூலம் மாணவர்களின் கல்வி மற்றும் ஆராய்ச்சியின் தரமானது உலகளவில் உறுதி செய்யப்படுவதாக கூறினார்.
மேலும், எங்களின் முக்கிய குறிக்கோளாக விளங்கும் “அனைவருக்கும் வேலைவாய்ப்பு” என்கிற அடிப்படையில் மாணவர்களை தொழில்துறையின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப தயார் செய்யும் பொருட்டு பல்வேறு வகையான தொழில்முறை பயிற்சிகள், பட்டறைகள் மற்றும் கருத்தரங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.
ஆதலால், மாணவர்கள் நல்ல பழக்கங்களுடன் ஒழுக்கத்தினை கடைபிடித்து, படிப்பு மற்றும் ஆளுமை மேம்பாட்டில் தங்கள் கவனத்தினை செலுத்தி பெற்றொர்களின் கனவுகளை நினைவாக்க தனது வாழ்த்துக்கள் என்று மாணவ மாணவிகளை வாழ்த்தினார்.
முன்னதாக கல்லூரியின் முதல்வர் முனைவர் யு.எஸ். ரகுபதி அவர்கள் முதலாமாண்டு பயிலவிருக்கும் மாணவர்களையும், அவர்தம் பெற்றோர்களையும் வரவேற்றார்.
இவ்விழாவில் ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலர் எஸ். நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ். திருமூர்த்தி, முதன்மை கல்வி அதிகாரி முனைவர் எஸ்.ஆறுமுகம் மற்றும் நந்தா தொழில் நுட்ப வளாகத்தின் நிர்வாக அலுவலர் ஏ.கே. வேலுசாமி ஆகியோர் கலந்து கொண்டு முதலாமாண்டு மாணவர்களை வரவேற்று வாழ்த்திப் பேசினார்கள்.
இதனை தொடர்ந்து, கோபிநாத் சந்திரன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில், தங்களது பிள்ளைகள் பொறியியல் படிப்பினை மேற்கொண்டு அனைத்து வளங்களையும் பெற்று வாழவேண்டும் என்கிற தாய் மற்றும் தந்தையர்களின் கனவு இன்று நினைவாகியுள்ளது. அதே நம்பிக்கையுடன் பாய்மரக்கப்பலை செலுத்துவது போல் விடாமுயற்சியுடன் திடமான நோக்கத்தினை கொண்டு மாணவர்கள் முன்னேற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதற்கு ஒழுக்கமும், அயராத உழைப்பும் ஒரு சேர இருக்கும் பட்சத்தில் வெற்றி நிச்சயம் என்றும்,
அதுபோல் சிறந்த நோக்கத்துடன் பயணிக்கும் போது தங்களது மனதின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, அதன் சொல்படி நடக்கும் பட்சத்தில் அங்கு வீழ்ச்சி என்பதே இல்லாமல் போகிவிடும், என்றும் மாணவர்களை கூறினார். மேலும், மாணவர்களுக்கும் அவர்தம் பெற்றோர்களுக்கும் தனது வாழ்த்தினை தெரிவித்தார்.
விழாவின் முடிவில், நந்தா தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் எஸ். நந்தகோபால் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.