மொடச்சூர் அயலூர் ஊராட்சி வாசு சென்னியப்பன் மஹாலில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. தி.மு.க. ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என். நல்லசிவம் அவர்கள் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், தெற்கு ஒன்றிய செயலாளர் சிறுவலூர் எஸ்ஏ முருகன் அவர்கள் முன்னிலை வகித்தார். கோபி நகர் மன்ற தலைவர் என் ஆர் நாகராஜ், தாசில்தார் இரா சரவணன், அரசு ஊழியர்கள் மற்றும் கோபி, அயலூர், மொட்டச்சூர் ஊராட்சி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டபொதுமக்கள் பலர் மாவட்டச் செயலாளர் நல்லசிவம் அவர்களிடம் மனு அளித்தனர்.