ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் இன்று (22.09.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, விதவை உதவித்தொகை, கருணை அடிப்படையில் வேலை, மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை, கலைஞரின் கனவு இல்லம், இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், ஆக்கிரமிப்பு மற்றும் காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் என மொத்தம் 318 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெற்று உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். மேலும், மாண்புமிகு முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் விலையில்லா சலவைப்பெட்டிகள் தலா ரூ.8,781/- வீதம் 10 பயனாளிகளுக்கு ரூ.87,810/- மதிப்பீட்டிலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் விலையில்லா தையல் இயந்திரங்கள் ரூ.6,690/- வீதம் 2 பயனாளிகளுக்கு ரூ.13,380/-மதிப்பீட்டிலும் மற்றும் கருணை அடிப்படையில் 1 நபருக்கும் சத்தியமங்கலம் சமூக நீதி பள்ளி மாணவியர் விடுதியில் சமையலராக பணி நியமனம் செய்யப்பட்டதற்கான ஆணையினையும் என மொத்தம் ரூ.1,01,190/- மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
மேலும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாரத்தான் மற்றும் தடகள அசோசியேசன் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான மூத்தோர் தடகள போட்டிகளில், ஈரோடு மாவட்டம் சார்பாக கலந்து கொண்டு, ஈட்டி எறிதல் போட்டியில் முதல் பரிசு, வட்டு எறிதல் போட்டியில் மூன்றாம் பரிசு மற்றும் உயரம் தாண்டுதலில் மூன்றாம் பரிசு பெற்ற ஆதிதிராவிடர் நலத்துறையின் இளநிலை பொறியாளர் த.மலர்விழி தான் வென்ற பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
.jpg)
.jpeg)
.jpeg)
%20(1).jpeg)
%20(1).jpeg)
