மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் ஆகியோர் தமிழ்நாட்டை விளையாட்டில் முதன்மை மாநிலமாக திகழவைக்க விளையாட்டுத்துறையில் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் முதலமைச்சர் விளையாட்டு போட்டிகளானது மாவட்ட விளையாட்டு அரங்கம் மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் 26.08.2025 அன்று தொடங்கி வைக்கப்பட்டு 14.09.2025 அன்று வரை நடைபெற்றுள்ளது.
2025-2026 ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் நடைபெற்றது. இந்த ஆண்டு ஈரோடு மாவட்டம் முழுவதிலும் இருந்து 12 வயது முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணாக்கர்களும், 17 வயது முதல் 25 வயது வரை கல்லூரி மாணாக்கர்களும், 15 வயது முதல் 35 வயது வரை பொதுபிரிவினர். அனைத்து வயது மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என 19,320 வீரர்கள் பதிவு செய்திருந்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் பதவியேற்ற பிறகு விளையாட்டுத்துறை பல்வேறு வளர்ச்சி பெற்றுள்ளது. சாம்பியன் பவுண்டேஷன் என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் சர்வதேச அளவில் விளையாடும் தமிழ்நாடு விளையாட்டு வீரர்களுக்கு தேவையான பயிற்சி, நிதியுதவி, விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட ஏராளாமான வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டு வருகிறது. விளையாட்டு வீரர்களாகிய நீங்கள் மற்றவர்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்க வேண்டும். விளையாட்டில் ஆர்வமுள்ள குழந்தைகளை ஊக்கப்படுத்த வேண்டும். விளையாட்டின் மூலம் கிடைக்கும் வாய்ப்புகள், நன்மைகளை எடுத்துரைப்பதன் மூலம் விளையாட்டில் ஆர்வம் இல்லாதவர்களுக்கு கூட ஆர்வம் ஏற்படும் வாய்ப்பாக அமையும். மேலும், விளையாட்டின் மூலமாக மனமும், உடலும் வலிமை பெறும். உடலும், மனமும் வலிமையாக இருக்கும்பொழுது எந்த செயலிலும் வெற்றி பெற இயலும். சர்வதேச அளவில் விளையாடும் விளையாட்டு வீரர்கள் தங்களின் மொழித்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
எனவே, விளையாட்டு வீரர்களாகிய நீங்கள் பல வெற்றிகளை பெற்று, ஈரோடு மாவட்டத்தை முன் உதாரணமான மாவட்டமாக மாற்றிட விளையாட்டுத்துறையில் தங்கள் திறனை மென்மேலும் வளர்த்திக்கொண்டு வெற்றி பெற வேண்டுமென வாழ்த்துகிறேன், எனப் பேசினார்.
மேலும் ஈரோடு மாவட்டத்தில் 26.08.2025 முதல் 14.09.2025 வரை நடைபெற்று முடிவுற்ற முதலமைச்சர்விளையாட்டு போட்டிகளில் பல்வேறு பிரிவில் கபடி, செஸ், குண்டு எறிதல், மேசைபந்து, இறகுப்பந்து, கைப்பந்து, ஓட்டப் பந்தயம், உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெற்ற முதல் 3 இடங்களை பிடித்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு முதல் பரிசாக ரூ.3,000, இரண்டாம் பரிசாக ரூ.2000, மூன்றாம் பரிசாக ரூ. 1000 என மொத்தம் 2307 வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு அவர்களது வங்கிக்கணக்கில் பரிசுத் தொகை பற்று வைக்கப்பட்டும் வருவதைத் தொடர்ந்து பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி அவர்கள் வழங்கி, வாழ்த்துக்களை தெரிவித்தார்.
.jpg)
%20(1).jpeg)
.jpeg)
%20(1).jpeg)
%20(1).jpeg)
.jpeg)
