ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள வசந்தம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2025 சிறப்புத் தள்ளுபடி விற்பனையினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி இன்று (17.09.2025) குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, முதல் விற்பனையையும் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 90 ஆண்டுகளாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் இரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமைாக சந்தைப்படுத்தி நெசவாளர்களுக்கு பேருதவி புரிந்து வருகிறது.
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் பட்டு இரக உற்பத்தியில் பாரம்பரியமாக ஈடுபட்டு வருகிறது. காஞ்சிபுரம், சேலம், கோவை, ஆரணி, தஞ்சை போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டுச்சேலைகள் வாடிக்கையாளர்களின் பெரும் வரவேற்பை பெற்றுத் திகழ்கின்றன. காலத்திற்கேற்ற புதிய வடிவமைப்பான வாடிக்கையாளர்களால் அதிகம் விரும்பப்படும் SOFT SILK எனப்படும் மென்பட்டு சேலைகளையும் கோ-ஆப்டெக்ஸ் அறிமுகப்படுத்தி வருகின்றது. தற்போது, தீபாவளி 2025 சிறப்பு விற்பனைக்காக கைத்தறி இரகங்களுக்கு 30% சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படவுள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட புதிய வடிவமைப்புகளுடன் கூடிய பட்டு, பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டிகள், லுங்கிகள், துண்டு இரகங்கள், ஆடவர் அணியும் ஆயத்த சட்டைகள், மகளிர் விரும்பும் சுடிதார் இரகங்கள், ஆர்கானிக் பருத்தி சேலைகள் மற்றும் ஏற்றுமதி தரம் வாய்ந்த ஹோம் பர்னிசிங் இரகங்கள் ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், கோ-ஆப்டெக்ஸ் முதுநிலை மண்டல மேலாளர் அம்சவேணி, முதுநிலை மேலாளர் ஜெகநாதன், மேலாளர் மோகன்குமார், ஈரோடு வசந்தம் விற்பனை நிலைய மேலாளர் பிரியா உட்பட கோ-ஆப்டெக்ஸ் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Full Video
.jpg)
.jpeg)
.jpeg)
%20(1).jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
%20(1).jpeg)
