40 -வது கண் தான இருவார விழாவை முன்னிட்டு டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மருத்துவக்குழு சார்பில் 09.09.2025 இன்று ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரி, ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஈரோடு நோபல் கல்லூரி மற்றும் எக்ஸெல் கல்வி நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய மாபெரும் கண்தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
Dr. ராணி மற்றும் ஈரோடு தெற்கு போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் இருந்து தொடங்கப்பட்ட விழிப்புணர்வு பேரணி ஈரோடு கலெக்டர் அலுவலகம் வரை நடைபெற்றது. இதில், கண் தானம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளுடன் கல்லூரி மாணவ - மாணவியர்கள் பேரணியாக சென்றனர்.