Type Here to Get Search Results !

ரூ. 100/- முதல் 20,000/- வரையிலான கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை - மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்.


ஈரோடு பூம்புகார் விற்பனை நிலையத்தில் "கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை
" மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் 10.09.2025 இன்று  துவக்கி வைக்கப்பட்டு 04.10.2025 வரை நடைபெறுகிறது.



இக்கண்காட்சியில் காகிதக்கூழ் மற்றும் மண்ணால் செய்யப்பட்ட லட்சுமி, கணேஷ், சரஸ்வதி, துர்க்கை, மகாபாரதம், தட்சிணாமூர்த்தி, லட்சுமிநாராயணன், தசாவதாரம், அஷ்டலட்சுமி. மீனாட்சிகல்யாணம், ஸ்ரீநிவாசகல்யாணம், கஜலட்சுமி, கிருஷ்ணன் தேர், சக்கரத்தாழ்வார், நின்ற கருடன் அனுமன் சேவை, ஆடிப்பூரம் அம்மன் அத்தி வரதர், ராமானுஜர், காஞ்சி மகாபெரியவர். சப்தகன்னிகள், காகிதக்கூழால் செய்யப்பட்ட 2 அடி உயரம் கொண்ட சென்னை காபாலீஸ்வரர், காளிகாம்பாள், 2 அடி தபசு காமாட்சி, 2 அடி கருமாரி அம்மன், 2 அடி வாஸ்து லட்சுமி, 2 அடி திருச்செந்துர் முருகன். 2 அடி கமாலாம்பாள், பஞ்சபூத ஸ்தலங்கள் செட், அஷ்ட பைரவர் செட், அறுபடை வீடு செட், கைலாச பர்வதம் செட், ஜோதிர் லிங்கம் செட், கிரிவலம் செட், 18 சித்தர்கள் செட் நவகிரங்கள் செட், ஐயப்பன் பூஜை, கிராமிய பெண்கள் செட், துளசி மாடம், ராமர் சேது பாலம், குகன் ஓடம், அனுமன் சஞ்சீவி மலை, கீதா உபதேசம், பழனிமலை செட், கல்யாண செட், பள்ளிக்கூடம் செட், திருப்பதி விஸ்வரூபம் செட், சீமந்தம் செட், கும்பகர்ணன் செட், சிவ குடும்பம், பெருமாள் தயார், தன்வந்திரி, வராகியம்மன், விவசாயம் செட், ராகவேந்திரர், தலைவர்கள், குபேரர், மீராபாய், கோபியர் செட், ஆதிசங்கரர், காய்கறிகள் பழங்கள் செட்,  திருமண வரவேற்பு செட், மரச்சொப்பு செட், மரபாச்சி பொம்மைகள், புத்து அம்மன், அஷ்ட வராகி, அயோத்திய ராமர், சூரிய ரதம், சதுர் பூஜா கருடாழ்வார், குறி சொல்ற அம்மன், கண்ணப்ப நாயனார் செட், தெப்பகுளம் செட், தில்லானா மோகனாம்மாள் செட், ராமர் ஜனனம், வாமணன் செட், திருச்சி உச்சி பிள்ளை செட், நவரச செட், குபேர பெருமாள் செட் மற்றும் பலவித கொலு பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப் பட்டுள்ளன.






இக்கண்காட்சியில் ரூ. 100/- முதல் 20,000/- வரையிலான கொலு பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கொலு பொம்மைகளுக்கு 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது.  எனவே பொதுமக்கள் இக்கண்காட்சிக்கு வருகை புரிந்து கைத்திறப் பொருட்களை வாங்கி கைத்திறத் தொழிலாளர்களை ஊக்குவிக்குமாறு, பூம்புகார் நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.


இந்நிகழ்வின் போது, பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர்கள் சேவியர், சிவசங்கர்  உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



FULL VIDEO...










Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.