மெட்வே மருத்துவமனை மற்றும் KMRD டிரஸ்ட் சார்பில் 09.09.2025 இன்று, சிக்கய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, RANM கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஸ்ரீ வாசவி கல்லூரி ஆகிய கல்லூரிகள் இணைந்து தலைக்கவசத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் "மண்ட பத்திரம்" என்ற பெயரில் மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி (Walkathon) நடைபெற்றது.
CSI -ன் பேராயர் முனைவர் A. ஜேக்கப் லிவிங்ஸ்டன் தலைமையில் நடைபெற்ற பேரணியை மாண்புமிகு மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஈரோடு மாநகராட்சி வளாகத்தில் இருந்து தொடங்கப்பட்டு GH ரவுண்டானா வரை பேரணி நடைபெற்றது. இதில் தலைக்கவசத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பதாகைகளை ஏந்தி கல்லூரி மாணவ-மாணவியர்கள் பேரணியாக சென்றனர்.
இந்நிகழ்வில், ஈரோடு மாநகராட்சி துணைமேயர் V. செல்வராஜ், ஈரோடு நகர உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் M. முத்துக்குமரன், ஈரோடு மாநகராட்சி மாநகர நல அலுவலர் கார்த்திகேயன், மெட்வே மருத்துவமனைகளின் நிறுவனர் Dr. T. பழனியப்பன், வெற்றி மருத்துவமனையின் துணை நிர்வாக இயக்குனர் T. K. C. பிள்ளை, மெட்வே மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி Dr. பார்த்திபன், ஈரோடு கிளை பொது மேலாளர் ஷியாம் K. சுதாகர், KMRD Trust -ன் துணைத் தலைவர் K. கணேஷ் ஆகியோர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
full Video