ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி கிளப் குடும்ப உறுப்பினர்கள் விழா மற்றும் ஈரோடு லோட்டஸ் மருத்துவமனையின் வெள்ளி விழா ஈரோட்டில் 14.09.2025 அன்று நடந்தது. ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி கிளப் சார்பில் பெற்றோரை இழந்த சுமார் 5000 அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு தலா இரண்டு சீருடைகள் மற்றும் இனிப்புகள் தீபாவளிக்கு முன்பு வழங்கப்படும், என சங்க நிறுவனத் தலைவர் டாக்டர் சகாதேவன் தெரிவித்தார்.
அதில், அரசு சார்பில் எட்டாவது வரை பயிலும் சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு சீருடை வழங்குகிறது. எனவே 9 முதல் 12 வரை பயிலும் ஒரு பெற்றோர் அல்லது இரண்டு பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு சீருடை வழங்கும் திட்டம் "அறிவின் ஆடை" என்ற பெயரில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதற்கான செலவு ஓராண்டுக்கு சுமார் ரூ. 75 லட்சமாகும். சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் நன்கொடை மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக பள்ளிக் கல்வித் துறை மூலம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு குழந்தைகளின் சீருடை அளவு கூட வாங்கப்பட்டுள்ளது, என்று அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், சங்க அறக்கட்டளை மற்றும் சங்க நிர்வாகிகள் எஸ். திருநாவுக்கரசு, எஸ். பாலசுப்ரமணியம், கே. சிவப்பிரகாசம், எம்.எஸ். கார்த்திகேயன், எம். கார்த்திக், சீருடை திட்ட தலைவர் பாலசுப்ரமணியம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpeg)
