நம்பியூர் திட்டமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரங்கத்தில் பாலின உளவியல் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
விழாவிற்கு வணிக நிர்வாகவியல் துறை தலைவர் முனைவர் யூனஸ் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் சூரியகாந்தி அவர்கள் தலைமையேற்று தலைமை உரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக டாக்டர் அரவிந்தன் அவர்கள் பங்கு பெற்று சிறப்புரை வழங்கினார்.
இவ்விழிப்புணர்வு கூட்டத்தில் மாணவ-மாணவிகளுக்கு பாலின பிரச்சனைகள் மற்றும் சவால் குறித்து தெளிவாகவும் விளக்கமாகவும் எடுத்துரைக்கப்பட்டது.
கணிதவியல் துறை தலைவர் மற்றும் இணை பேராசிரியர் முனைவர் தமிழ்மணி அவர்கள் நன்றி உரையை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு இருபால் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவ்விழாவை வணிக நிர்வாகவியல் துறை பேராசிரியர் முனைவர் வாணி அவர்களும், தமிழ் துறை பேராசிரியர் பரிமளக்குமார் அவர்களும் தொகுத்து வழங்கினார்கள்.