கோபி கலை அறிவியல் கல்லூரியின் இரத்தக் கொடையாளர் சங்கம், இளஞ் செஞ்சிலுவை சங்கம் மற்றும் சத்தியமங்கலம் தன்வந்திரி குருதி வங்கியுடன் இணைந்து இரத்ததான முகாமை கல்லூரி வளாகத்தில் நடத்தியது. இதில் 44 அலகுகள் இரத்தம் மாணவ, மாணவியர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி அலுவலர்களால் கொடையாக வழங்கப்பட்டது.
கல்லூரியின் முதல்வர் முனைவர். தெ. வேணுகோபால் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இம்முகாமில் கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் எம். தரணிதரன், சத்தியமங்கலம் தன்வந்திரி குருதி வங்கி மருத்துவர்கள் மருத்துவர் தங்கவேல், மருத்துவர் நரசிம்மன், மருத்துவர் சின்னசாமி, துணை முதல்வர்கள் முனைவர் எம். ராஜூ, முனைவர் என். சக்திவேல் செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். குருதிக் கொடை அளித்த அனைவரையும் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர். கொடையாளர்கள் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இம்முகாமிற்கான ஏற்பாடுகளை இரத்த கொடையாளர் சங்கம் முனைவர். ஜி. கவிதா, முனைவர். பி. துரைசாமி, .ஈ.உதயகுமார், இளம் செஞ்சிலுவை சங்க அலுவலர்கள் முனைவர். கே. ராஜேந்திரன், திருமதி. ஆர். மல்லிகா, செல்வி. ஆர். கிருக்ஷ்ணவேணி மற்றும் மாணவத் தொண்டர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.
