காசிபாளையம் பேரூராட்சி 12 மற்றும் 13-வது வார்டில் அமைந்துள்ள காராப்படி ரோடு மிகவும் பழுதடைந்து வாகனங்கள் செல்ல சிரமப்படும் நிலை இருந்ததாக கூறப்படுகிறது. இதனை பலமுறை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்று, அதன் பின் சாலை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த சாலை 1.5 கி.மீ. தூரத்திற்கு போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சாலை பணி நடைபெறும் இடத்தில் பேரூராட்சி மன்ற 12 ஆவது வார்டு உறுப்பினர் கே எஸ் கோதண்டன் நேரில் சென்று சாலையின் தரத்தை திடீர் ஆய்வு செய்தார். அப்போது மேற்பார்வையாளர் மற்றும் டெக்னீசியன் ஆகியோர் உடன் இருந்தனர்.