நம்பியூர் திட்டமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மூன்றாவது பட்டமளிப்பு விழா கல்லூரி கலை அரங்கத்தில் (19.09.2025) நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரியின் முதல்வர். முனைவர். எஸ். சூரியகாந்தி தலைமை ஏற்று பட்டமளிப்பு விழாவின் அனைத்து நிகழ்வுகளையும் ஒருங்கிணைத்து வழி நடத்தினார்.
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஈரோடு வேளாளர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர். ஆர். பார்வதி கலந்து கொண்டு 2023 மற்றும் 2024 கல்வி ஆண்டில் பாரதியார் பல்கலைக்கழகத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 332 மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கி சிறப்பித்தார். மேலும் தற்காலத்தில் மாணவர்கள் சந்திக்கும் எதிர்கால சவால்கள் மற்றும் அதனை எதிர்கொள்ளும் வழிமுறைகளையும் விளக்கமாக கூறி மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் உரையாற்றினார்.
விழாவின் அடுத்த நிகழ்வாக, கணிதவியல் துறை 16 மாணவ மாணவிகள், ஆங்கிலத் துறையின் 34 மாணவ மாணவிகள் மற்றும் பொருளியல் துறையின் 30 மாணவ மாணவிகளை துறையின் தலைவர் முனைவர். ஈ. தமிழ்மணி அவர்கள், பட்டம் பெற அழைக்க சிறப்பு விருந்தினர் பட்டங்களை வழங்கினார்.
தமிழ் துறையின் 60 மாணவ மாணவிகள் மற்றும் வணிக நிர்வாகவியல் துறையின் 67 மாணவ மாணவிகளை துறையின் தலைவர் முனைவர். அ.வ.யூனஸ் அவர்கள், அழைக்க சிறப்பு விருந்தினர் பட்டங்களை வழங்கினார்.
வணிகவியல் துறையின் 62 மாணவ மாணவிகளை துறையின் தலைவர் முனைவர். ஏ.நாகேந்திரன் அவர்கள், அழைக்க சிறப்பு விருந்தினர்கள் பட்டங்களை வழங்கினார்.
கணினி அறிவியல் துறையின் 39 மாணவ மாணவிகள் மற்றும் வரலாற்று துறையின் 24 மாணவ மாணவிகளை துறையின் தலைவர். த.வரதராஜன் அவர்கள், அழைக்க சிறப்பு விருந்தினர் பட்டங்களை வழங்கினார்.
செய்தியாளர் - சிவக்குமார்
%20(1).jpg)
.jpeg)
