ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி, 46- புதூர், நொச்சிக்காட்டுவலசு, பிரியா மஹாலில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமினை மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் இன்று (19.09.2025) நேரில் சென்று பார்வையிட்டு 7 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு உடனடி தீர்வு வழங்கும் வகையில் "உங்களுடன் ஸ்டாலின்" என்ற சிறப்புத் திட்டத்தை தொடங்கி வைத்து, இச்சிறப்பு திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
அதன்படி, இன்று மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள். மொடக்குறிச்சி, 46- புதூர், நொச்சிக்காட்டு வலசு, பிரியா மஹாலில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமினை நேரில் சென்று பார்வையிட்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். இம்முகாமில் மனு அளித்தவர்களுக்கு உடனடி தீர்வாக 4 பயனாளிகளுக்கு குடிநீர் வரிக்கான சான்றிதழ்களையும், 3 பயனாளிகளுக்கு மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கான சான்றிதழ்களையும் என மொத்தம் 7 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இம்முகாமில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார், மொடக்குறிச்சி வட்டாட்சியர் சிவசங்கர் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpeg)
.jpeg)
