ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று (19.09.2025) தூய்மை தமிழ்நாடு நிறுவனத்தின் சார்பில் (தூய்மை இயக்கம் 2.0) அரசு அலுவலகங்களில் சேகரிக்கப்பட்ட கழிவுகளை விற்பனை செய்யும் பணியினை மாண்புமிகு வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்திகழ்வில் மாண்புமிகு வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது,
உலக சுத்தமே சுகாதாரம் என்பது தமிழரின் வாழ்வியல் வழிமுறை தூய்மை மற்றும் சுகாதாரத்துடன் கூடிய வளர்ச்சியே நிலையான வளர்ச்சி. இதன் அடிப்படையில் மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி சுற்றுச்சூழல் தினமான ஜுன் 5 ஆம் தேதி தூய்மை மிஷன் 1.0 மாவட்டம் மற்றும் வட்டார அளவில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, செப்டம்பர் மூன்றாவது வாரத்திலிருந்து தூய்மை மிஷன் 2.0 துவங்கி அனைத்து துறை அரசு அலுவலகங்கள், சார்நிலை அலுவலகங்கள் ஊராட்சி அளவில் விரிவாக்கம் செய்து இந்த எழுச்சிமிகு இயக்கத்தினை கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வியக்கம் மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் அனைத்து அரசு துறை அலுவலகங்களில் பயன்படுத்தப்படாமல் உள்ள தேவையற்ற பொருட்களை கண்டறிந்து அவற்றினை சேகரித்து, சேகரித்த கழிவுகளை அதற்கென நிர்ணயிக்கப்பட்ட விற்பனையாளர்களைக் கொண்டு விற்பனை செய்யப்பட்ட தொகையினை உரிய அரசு தலைப்புகளில் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் அனைத்து துறை அலுவலகங்கள், வருவாய் துறை, வட்டாட்சியர் அலுவலகங்கள், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலகங்கள், நகர்புற உள்ளாட்சி அமைப்புகள், வேளாண்மை மற்றும் விவசாய நலத்துறை அலுவலகங்கள். பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அலுவலகங்கள் மற்றும் அனைத்து சார்நிலை அலுவலகங்கள் வரை தூய்மை மிஷன் 2.0 வில் உள்ளடக்கி இவ்வியக்கம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தூய்மை தமிழ்நாடு நிறுவனம் மூலம் கழிவு பொருட்கள் சேகரிப்பாளர்களை கண்டறிந்து பட்டியலினை தொகுத்து கழிவுகளுக்கான விலை நிர்ணயமும் செய்யப்பட்டுள்ளது. இதற்கென பிரத்தியேகமாக ஒரு இணையதளத்தினை ஏற்படுத்தி அனைத்து நடவடிக்கைகளையும் பதிவேற்றம் செய்து கழிவுகள் சேகரித்தல் முதல் கழிவுகள் நீக்கம் செய்யப்படும் வரை புகைப்படங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை இத்தூய்மை இயக்கம் அனைத்து துறையிலும் தொடர்ந்து நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இவை அனைத்தும் பொது மக்களும் அறிந்து சிறப்புற வேண்டிய நிலையில் அமைய மாவட்ட நிர்வாகத்தினால் வழிவகை செய்யப்பட்டுள்ளது, என தெரிவித்தார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் அரசுத் துறை அலுவலகங்களில் பயன்படுத்தப்படாமல் இருந்த தேவையற்ற சேகரித்த கழிவுகளை அதற்கென நிர்ணயிக்கப்பட்ட விற்பனையாளர்களைக் கொண்டு விற்பனை செய்யப்படும் பணியினை தொடங்கி வைத்தார். மேலும் கழிவுகளை எடையிட்டு கழிவு நீக்கம் செய்யபப்படுவதை பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் அலுவலகம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதற்கான தூய்மை உறுதிமொழியினை அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார், மாண்புமிகு ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் வே.செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், ஈரோடு மாநகராட்சி ஆணையாளார் அர்பித் ஜெயின், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) பிரியா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முகம்மது குதுரத்துல்லா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
%20(1).jpg)
.jpeg)
%20(1).jpeg)
%20(1).jpeg)
.jpeg)
%20(1).jpeg)
.jpeg)
%20(1).jpeg)
.jpeg)
%20(1).jpeg)
.jpeg)
