ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (18.09.2025) இன்று அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் வாக்குச்சாவடி மறுசீரமைப்பு - கலந்தாய்வு கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டத்தில் ஏற்கனவே 2,222 வாக்குச்சாவடிகள் இருந்த நிலையில், தற்போது 156 புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளதால் மொத்த வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 2,378 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட தேர்தல் அலுவலர் ஆட்சித்தலைவர் அவர்கள் /மாவட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கருத்துக்களையும் கேட்டறிந்து, அதற்கேற்ப வாக்குச்சாவடி மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.சுஜாதா, சார் ஆட்சியர் (கோபிசெட்டிபாளையம்) சிவானந்தம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpeg)
%20(1).jpeg)
