அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே ஏ செங்கோட்டையன் அவர்கள் நேற்று கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதில் அதிமுகவிலிருந்து பிரிந்தவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என்றும், அப்போதுதான் அதிமுக மீண்டும் ஆட்சியை அமைக்க முடியும் என்றும், 10 நாட்களுக்குள் இதை செய்யாவிட்டால் ஒருங்கிணைக்கும் முயற்சி தொடரும் என்றும் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், இன்று எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுகவின் அமைப்புச் செயலாளர் மற்றும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
மேலும், நேற்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கட்சியின் பொறுப்பாளர்கள் சிலரையும் கட்சியிலிருந்து நீக்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.