உலக முதுகு தண்டுவட பாதிப்பு தினத்தை முன்னிட்டு (05.09.2025) இன்று சாலை விபத்தினால் ஏற்படும் வாழ்நாள் ஊனத்தை தவிர்க்க வேண்டி வலியுறுத்தி ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சார்பாக சாலை பயண விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
இந்த பேரணியை மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி அவர்கள், ஈரோடு மாவட்ட கண்காணிப்பாளர் திருமதி சுஜாதா அவர்கள், போக்குவரத்து துறை அதிகாரிகள், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ் அவர்கள்,மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.