ஈரோடு மாவட்டம் ரங்கம்பாளையம் ரிங் ரோடு அருகில் உள்ள ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் உள்ள குமரன் அரங்கில் ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக TNPSC குரூப் 2/2A தேர்வுகளுக்கு மூன்றாம் கட்ட கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் துவக்கி வைக்கப்பட்டது.
ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெ. திருவாசகம் வரவேற்புரை நிகழ்த்தினார். இவ்விழாவில், முன்னாள் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஏ. கலியமூர்த்தி கலந்து கொண்டு மாணவர்களிடையே சிறப்புரை ஆற்றினார்.
மாவட்ட, மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஈரோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாக இயக்குனர் ஆர். வெங்கடாசலம், விவேகானந்தா IAS அகாடமியின் நிறுவனர் முனைவர். கிருபாகரன் பயிற்சியளித்தனர்.
மாநகர இளைஞரணி அமைப்பாளர் கே. டி. சேந்தபுகழன் நன்றியுரை ஆற்றினார். இந்த நிகழ்வில் திமுக மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதி, பேரூர் நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் துணை அமைப்புகளின் நிர்வாகிகள், இளைஞர் அணியினர் கலந்து கொண்டனர் .