ஈரோடு பிரிமியர் அரிமா சங்கம், ஈரோடு எக்ஸ்லண்ட் அரிமா சங்கம், ஈரோடு எல்லோ சன்சிட்டி அரிமா சங்கம் மற்றும் ஈரோடு அரசன் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய பள்ளி மாணவ, மாணவியருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் (EYE SCREENING) 16.10.2025 வியாழக்கிழமை ஈரோடு ரயில்வே ஸ்டேசன் ரோடு CSI தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.
CSI School Correspondent T. ராஜ்குமார் தலைமையேற்று வரவேற்புரை ஆற்றினார். முன்னாள் மாவட்ட ஆளுநர் அரிமா பூர்ணிமா டன்னா MJF முகாமை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். மண்டலத் தலைவர் அரிமா P. சபாபதி M.JF மற்றும் வட்டாரத் தலைவர் அரிமா N. சேகர் ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினர். மாவட்ட தலைவர் சிலிகேட் பாலா @ அரிமா P. பாலமுருகன் முகாம் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்.
இந்நிகழ்ச்சியில், ஈரோடு பிரிமியர் அரிமா சங்க தலைவர் அரிமா P. ராஜ்குமார், செயலர் (நி) அரிமா K.விக்னேஷ்குமார், செயலர் (சே) அரிமா J. ராஜ்குமார், பொருளர் அரிமா V. பன்னீர்செல்வம், ஈரோடு எக்ஸ்லண்ட் அரிமா சங்க தலைவர் அரிமா T.S.P. தாமேதரன், செயலர் (நி) அரிமா J. தீபன்ராஜ், செயலர் (சே) அரிமா S. சுப்ரமணியம், பொருளர் அரிமா E.N.முகம்மது உவைஸ், ஈரோடு எல்லோ சன்சிட்டி அரிமா சங்க தலைவர் அரிமா T. மகேஸ்வரி, செயலர் அரிமா S. ரேவதி சரவணன், பொருளர் அரிமா P. சுசீலா ஆகியோர் மற்றும் அரிமா சங்க நிர்வாகிகள், அரிமா உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
.jpg)





