ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி அவர்கள் இன்று (17.10.2025) ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக்கிடங்கில் மாதாந்திர இயல்பு தணிக்கை மேற்கொண்டார்.
இந்நிகழ்வின் போது ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சிந்துஜா, தனி வட்டாட்சியர் (தேர்தல்) சங்கர்கணேஷ், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தார்கள்.