ஈரோடு மாநகராட்சி மண்டலம்-3. முத்தம்பாளையம் பகுதி-2 வார்டு எண்-50. ஸ்டெம் பார்கில் (அனைக்கட்டு அருகில்) இன்று (27.10.2025) மாண்புமிகு ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் அவர்கள் தலைமையிலும், வார்டு எண்-51 சாந்தான் கருக்கு சர்ச் பகுதியில் வார்டு உறுப்பினர் விஜயலட்சுமி மணி அவர்கள் தலைமையிலும், மண்டலம் 1. வார்டு எண் 6. காந்தி நகர், மாநகராட்சி சமுதாயக்கூடத்தில் வார்டு உறுப்பினர் தமிழ்பிரியன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற வார்டு சிறப்புக்கூட்டத்தில் மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு உடனடி தீர்வு வழங்கும் வகையில் "உங்களுடன் ஸ்டாலின்" என்ற சிறப்புத் திட்டத்தை தொடங்கி வைத்து, இச்சிறப்பு திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. தீர்வுகாணப்பட்ட மனுக்களுக்கு அன்றைய தினமே பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் சோலார் பேருந்து நிலையத்தில் பணிகள் நிறைவுறும் நிலையில் விரைவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படவுள்ளது. மேலும் ஈரோடு மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது.
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் அடிப்படை சேவைகளை இக்கூட்டத்தில் பொதுமக்களாகிய தாங்கள் பங்கு கொண்டு தங்கள் வசிக்கும் மாநகராட்சியால் வழங்கப்பட்டு சேவைகளான அடிப்படை குடிநீர் வழங்கல், திடக்கழிவு மேலாண்மை, தெரு விளக்கு பராமரிப்பு, சாலைகள் பராமரிப்புகள், பூங்கா பராமரிப்பு, மழைநீர் வடிகால் வைப்பு ஆகிய சேவைகள் குறித்தான கோரிக்கைகளை எடுத்துவைத்து அதில் ஏதேனும் சேவை குறைபாடு இருப்பின் மனு அளித்து அதற்கான தீர்வுகளை உடனடியாக தீர்த்து வைக்க தீர்வு காண படவுள்ளது. தங்களது வார்டு பகுதியினை பசுமையாக்கும் வகையில் திறந்த வெளியிடங்கள் சாலையோர பகுதிகள் குளக்கரைகள் மற்றும் ஏரிக்கரைகள், ஆகியவை ஏதும் இருப்பின் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் மரக்கன்றுகளை நட்டு பராமரித்தல், குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் ஈரோடு மாநகராட்சி, மண்டலம் - 3 பகுதியில் மரக்கன்று மற்றும் பனை விதை நடும் பணியினையும் துவக்கி வைத்தார். மேலும் வார்டு சிறப்புக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கினார். இன்றைய தினம் ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட 20 வார்டுகளில் அந்தந்த வார்டு உறுப்பினர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ச. கந்தசாமி, சட்டமன்ற உறுப்பினர் வி. சி. சந்திரகுமார் (ஈரோடு கிழக்கு), ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் அர்பித் ஜெயின், 3-வது மண்டல குழு தலைவர் சசிக்குமார், துணை ஆணையர் தனலட்சுமி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpeg)
%20(1).jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
%20(1).jpeg)
.jpeg)
%20(1).jpeg)
